உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பெற்றோர் புகார் அளித்தனரா: ஐகோர்ட் கேள்வி

பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பெற்றோர் புகார் அளித்தனரா: ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவைக்கு, கடந்த 18ல் பிரதமர் மோடி வந்தார். அப்போது, 'ரோடு ஷோ' நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவையில் உள்ள அரசு உதவி பெறும் சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளிச் சீருடையில் அழைத்து சென்றதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புகழ்வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பிரதமர் நிகழ்ச்சி காரணமாக, மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.'பெற்றோர் அழைத்து செல்லாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றனர். அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும்' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், ''மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணைக்கு பின் புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்பட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.''அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்றது தவறு. கூட்ட நெரிசலில், நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்து, அவர்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'பள்ளி குழந்தைகளை, பிரதமர் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றது தொடர்பாக, பெற்றோர் எதுவும் புகார் அளித்து உள்ளனரா; நிகழ்ச்சியில் இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தனரா; சிறார் நீதி சட்டம் எப்படி பொருந்தும் என்பன குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, 8ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.அப்போது, பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venkataraman
ஏப் 05, 2024 10:37

திமுகவினர் செய்யும் அடாவடி, அக்கிரமங்களை யாரும் கேட்பதும் கொள்வதும் காவல்துறையினர் கண்டு கொள்வதும் இல்லை நீதிமன்றம் தானாக முன்வந்து, திமுகவினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க வேண்டும்


duruvasar
ஏப் 05, 2024 10:19

ஸ்டாலின் என ஒரு குழந்தை ஓடியதே அந்த குழந்தைக்கு மனதளவில் பாதிப்பு வந்திருக்காதா ?


P.Sekaran
ஏப் 05, 2024 10:04

நீட்டுக்கு பள்ளி பள்ளியாக கையெழுத்து வாங்கியது என்ன நியாயம் நாட்டின் பிரதம மந்திரியை பார்க்க சென்றது எந்த விதத்தில் குற்றமாகும் தண்டனை பெற்ற பொன்முடியே மீண்டும் அமைச்சராக்கியது எந்த விதத்தில் நியாயம் இந்த காலத்தில் நியாயமாக நடக்க கூடாது அநியாயம் செய்பவர்களுக்கு காலமாக உள்ளது


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஏப் 05, 2024 09:40

பிரதமரை நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி அல்ல தேர்தல் காலத்தில் வாக்களிக்க கூறும் ரோடு ஷோ இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பள்ளியால் அமைப்பு ரீதியாக பங்கேற்க வைக்கப்பட்டால் அது மிகவும் தவறு பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் இதனை நீர்த்துப்போக செய்வார்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு ஒரு கிறிஸ்தவ பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் இந்த நாளிதழில் வாசகர்கள் இதேவிதம் தான் கருத்து கூறுவார்களா


பேசும் தமிழன்
ஏப் 05, 2024 08:59

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.... தோல்வி பயம் அவர்களை அப்படி பேச வைக்கிறது.


VENKATASUBRAMANIAN
ஏப் 05, 2024 08:00

மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது வேனில் அழைத்து சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள் அதற்கு எந்த வழக்கும் இல்லை பாஜக என்றால் விரைவில் நடவடிக்கைகள் உண்மையான இல்லையா என்று கூட பார்ப்பதில்லை இதுதான் திராவிட மாடல்


பேசும் தமிழன்
ஏப் 05, 2024 07:45

விடியல் மற்றும் அவரது மகன் பங்கேற்கும் நிகழ்ச்சியில்.... பள்ளி குழந்தைகள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகின்றனர்.... அதன் மீது எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.... இதை நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும்..... பிஜெபி கட்சி சார்பில்..... அப்படியான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


Mohan
ஏப் 05, 2024 09:26

அந்த நெஞ்சுரம் பி ஜே பி ல யாருக்கும் இல்லேனு நினைக்குறேன் எத்தனை நிகழ்வுகள் இருக்கு ஒரு தனக்கு கூடவா இதெல்லாம் தோணல கொடுமை


அப்புசாமி
ஏப் 05, 2024 07:42

புகார் குடுத்தாதான் விசாரிப்பீங்களா யுவர் ஆனர்?


venugopal s
ஏப் 05, 2024 06:45

பாஜக என்ன செய்தாலும் சரி என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது, மற்ற கட்சியினர் எது செய்தாலும் அது குற்றம் என்ற மனப்பான்மை மாறவேண்டும்!


raja
ஏப் 05, 2024 06:11

டிரக் உதை பள்ளி குழந்தைகளிடம் நீட்டுக்கு எதிராக கையெழுத்து போடும்படி வலுக்கட்டாயமாக மிரட்டி வாங்கியபோது குழந்தைகள் மன உலச்சலுக்கு ஆலாயிருக்க மாட்டாங்களா எஜமான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை