| ADDED : ஆக 29, 2011 12:58 AM
காரைக்குடி : ''வெளிநாட்டு பல்கலை மாணவர்கள் இந்திய பல்கலைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டால், கல்வித்தரம் உயரும்,'' என, காரைக்குடியில் உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் பேசினார். அழகப்பா பல்கலை மேலாண்மை துறை சார்பில் 'வளர்ச்சிக்கான ஆட்சிமை, கணக்கியலின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பதிவாளர் மணிமேகலை வரவேற்றார்.
உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் பேசுகையில்,'' சங்ககாலம் தொட்டு நந்தனர்கள், மவுரியர்கள், குப்தர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் ஆட்சிமை இருந்தது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூலில், சிறந்த ஆட்சிமையின் கோட்பாடாக மக்களை பராமரித்து, பாதுகாத்தல், செல்வத்தை அபிவிருத்தி செய்தல் என குறிப்பிட்டுள்ளார். இவை இன்றைய சூழலுக்கும் பொருந்தும். இன்றைய இளைஞர்கள் சமூக விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும். தமிழக பல்கலை, கல்லூரி ஆசிரியர், மாணவர்கள் வெளிநாட்டிற்கும், வெளிநாட்டு பல்கலை பேராசியர், மாணவர்கள் இந்திய பல்கலையிலும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதால், கல்வித்தரம் உயரும்,'' என்றார்.