உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் தான் படித்த ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.கடந்த 1970ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் ஜெட் புரபல்சனில் முதுகலைப் பட்டம் (ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்) பெற்றவர். அத்துடன் 1980ம் ஆண்டில் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் ஹாஃப்மேன் குழும நிறுவனங்களில் குழுமத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியனார்.இந்நிலையில் தான் பயின்ற சென்னை ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கினார். அகில இந்திய கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.மேலும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை ஐ.ஐ.டிக்கு கிடைத்த மிகபெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐ.ஐ.டி. டீன், பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த நன்கொடையைக் கொண்டு சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், சென்னை ஐஐடியின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீர்ர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில், “சென்னை ஐ.ஐ.டியில் நான் படித்த நிகழ்வை மறக்க முடியாது.மகிழ்ச்சிகரமாக இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் எனக்கு உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் வளர்ந்துள்ளேன் என்றார்.கிருஷ்ணசிவகுலா ஆண்டிற்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வருவாய் தரக்கூடிய வகையிலான இரண்டு தொழில்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஆக 07, 2024 05:44

வாழ்த்துகள்


Venugopal Mp
ஆக 07, 2024 00:59

ஐஐடி பரிட்சை, அந்த நிறுவனத்திற்கு மட்டும் நடத்தப்படுகிறது. அனைத்து பொறியியல் கல்வி கூடங்களுக்கு அல்ல. மேலும் இதில் தேறினால் மதிப்பெண் வரிசை படி, ஐஐடி கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும். நீட் அப்படி அல்ல. எந்த ஒரு மருத்துவ கல்லூரிக்கும் நீட் மதிப்பெண் தேவை. இதில் தேறினால் மருத்துவ கல்லூரியில் அனுமதி கிடைக்கும் என நிச்சயம் கிடையாது. உங்களை விட குறைவாக மதிப்பெண் பெற்று நான் கல்லூரியில் அனுமதி பெற முடியும். இது போன்ற காரணத்தால் நீட் எதிர்க்கப் படுகிறது.


sekar
ஆக 07, 2024 08:25

200 ரூபாய் குவாட்டர் பிரியாணிக்கு இவ்வளுவு கூவ கூடாது


Kundalakesi
ஆக 06, 2024 23:25

ஒன்லி பெஸ்ட் கேன் study


T.sthivinayagam
ஆக 06, 2024 23:11

ஏன் வயநஈட்டிற்கு நன்கொடை கொடுத்து இருக்கலாம்


ganapathy
ஆக 07, 2024 01:08

உன்னுடைய ராவுலு வின்சி எவ்வளவு கொடுத்தாரு? மக்கள் வரிய ஆட்டைய போட்டு பெயில்ல....


Anu Sekhar
ஆக 06, 2024 22:08

நல்ல வேளை , ஐஐடி இந்த திராவிட கொள்ளியார்கள் பிடியில் இல்லை. 10 ரூபாய் தான் கிடைக்கும் . மீதியை ஆட்டை போட்டிருப்பாங்க.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 22:07

சென்னை ஐஐடி யில் படிப்பவர்களில் பத்து சதவீதம் மட்டுமே நம் மாநிலத்தவர் என்கிறார்கள்.ஆனால் நீட்டை எதிர்க்கும் கும்பல் ஐஐடி நுழைவுத் தேர்வைப் பற்றி வாய் திறக்கவில்லை..


Venugopal Mp
ஆக 07, 2024 01:01

முதலில் நீட் பரிட்சை/ ஐஐடி பரிட்சை தேர்வு முறை பற்றி தெரிந்து கொண்டு பதில் போடுங்கள்


SS
ஆக 07, 2024 10:50

ஐஐடி-க்கான தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் அட்மிஷன் கிடைக்கும். ஆனால் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்தால் போதும். பணம் இருந்தால் மருத்துவ கல்லூரியில் சேரலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை