ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை:வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது குறையவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிக்கின்றன. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலை என்ன, ஏதேனும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசு தரப்பிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். தேர்தல் குற்றங்களுக்காக எத்தகைய நடைமுறையை பின்பற்றி வழக்கு பதிவு செய்யப்படுகிறது, பணப்பட்டுவாடாவை தடுக்க பரிந்துரைகள் இருந்தால் தேர்தல் கமிஷன் தரப்பிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு