உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா?: கலெக்டர் விளக்கம்

பிரதமரின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா?: கலெக்டர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த குமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர், 'பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல' எனக் கூறினார்.பிரதமர் மோடி இன்று (மே 30) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவங்குகிறார். ஜூன் 1ல் அங்கிருந்து கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. அதில், 'பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தியானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது' எனக்கூறப்பட்டு உள்ளது.இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை மற்றும் விவேகானந்தர் பாறையில் தியானம் போன்ற நிகழ்வுகள் தேர்தல் விதிமீறலா என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை,'' என விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Vivek
ஜூன் 01, 2024 15:23

தேர்தல் பிரச்சாரம் முடிந்து முதல்வர் கொடைக்கானல் போகலாம் ஓய்வுக்காக ட்ரோன் பறக்க கூடாது, மக்கள் e pass வேண்டும், இளையவர் ஸ்பெயின் செல்லலாம் ஓய்வுக்காக, ஆனால் நாட்டின் பிரதமர் தியானத்திற்கு வரக் கூடாதா??? பலே பேஷ் பேஷ் நல்ல மாடல்


rasaa
ஜூன் 01, 2024 11:54

மேலே உள்ள படம் அமர்நாத் குகையில் தியானம் செய்யும்போது எடுக்கப்பட்டது


R S BALA
மே 31, 2024 13:19

இப்படி வழக்கு போட்டு இன்னும் கொஞ்சம் பேமஸ் ஆக்கிட்டுனவ நம்ம தலய


திண்டுக்கல் சரவணன்
மே 31, 2024 10:17

இந்தியா நட்டுக்கு சேவை செய்ய, நரேந்திரனின்விவேகானந்தர் மறு பிறப்பு தான் நரேந்திர மோடி.


S.R
மே 30, 2024 19:58

பாரத பிரதமர் தியானம் செய்தால் ஏன் பலருக்கு நிம்மதி போகின்றது என்பது தெரியவில்லை. தியானம் செய்வது அவரின் உரிமை. வருடம் முழுவதும் உழைக்கும் பிரதமர் இரண்டு நாள் தியானம் செய்வது அவருக்குப் புத்துணர்ச்சி தரும்.


veeramani
மே 30, 2024 19:24

பிடிக்காத மருமகள் நின்றாள் குற்றம் ... தமிழக ஆளும் க ட்சிக்கு பாரத பிரதமர் திரு மோடி ஜி யை பிடிக்கவில்லை. எனவே அவரின் ஓவரோரு செயலுக்கும் குற்றம் என சோல்லுகிறார்கள். தனி ம னிதா சுதந்திரம் என்பது இந்தியாவின் மரியாதை. ஜூன் முதல் வாரம் வரை .........பொருப்பூம்


Sivak
மே 30, 2024 18:44

இதே நாகூர் தர்காவில் தொழுகை பண்ண போயிருந்தா அல்லது சார்ச்ல ஜெபம் பண்ண போயிருந்தா அனைத்து தீய சக்திகளும் நவ துவாரத்தையும் மூடிட்டு இருப்பானுங்க ....


jayvee
மே 30, 2024 17:51

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன், முதல்வர் கொடைக்கானல் சென்று ஓய்வுஎடுத்துததும் மிக பெரிய தேர்தல் நடத்தை விதிமீறல் ..


theruvasagan
மே 30, 2024 17:26

பிராசரத்துக்கு வரவில்லை. பொதுக் கூட்டத்தில் பேசப் போகிறதில்லை. ஓட்டுப் போடுங்கன்னும் கேட்கப் போகிறதில்லை. அவர் தியானம் செய்தால் அதுக்குக் கூட ஓட்டுகள் விழும்னு சிலதுகளுக்கு அல்லு விடுதுன்னா அது ஒரு விதமான வியாதியாகத்தான் இருக்கணும். பீதியில பேதியானா அதுக்கெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.


Anand
மே 30, 2024 17:12

அவர் தியானம் செய்தால் கூட்டுக்களவாணிகள் ஏன் ஊளையிடுகிறார்கள்?


மேலும் செய்திகள்