உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி நடந்தது எப்படி?

கள்ளச்சாராய பலி நடந்தது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 4 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4yackh4i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சி, அதனை கண்ணுகுட்டி என்பவர் வாங்கி வந்து, கருணாபுரத்தில் இதற்காக தனி வீடு ஒன்றில் வைத்து பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்துள்ளார். ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த கள்ளச்சாராயம், மலிவு விலையில், அதிக போதை தருவதால், அக்கிராமத்தினர் சிலர் தொடர்ந்து வாங்கி அருந்தியுள்ளனர். பாக்கெட் போடுவதுடன் வீட்டில் 24 மணி நேரமும் சாராயம் விற்றுள்ளார் கண்ணுகுட்டி. அதுமட்டுமல்லாமல் கண்ணுகுட்டி வீட்டில் இருந்து ஏஜென்டுகளுக்கும் பாக்கெட் சாராயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்பே எச்சரித்த 'தினமலர்'

'கல்வராயன் மலையில் காய்ச்சப்படும் சாராயம் சமவெளிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது; இதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என நேற்று முன்தினம், 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருந்தால் உயிர் பலிகளை தடுத்திருக்கலாம் என கள்ளக்குறிச்சி மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Raghavan
ஜூன் 20, 2024 23:07

எங்கே நம் கனிமொழி அக்கா. டெல்லி சென்று விட்டாரோ அல்லது இந்த சம்பவம் தன் தொகுதியில் நடக்கவில்லை என்று வாய்பேசாமல் இருக்கிறாரோ


ems
ஜூன் 20, 2024 22:32

தி மு க தலைவருக்கும் ஒரு பாகெட் கள்ள சாராயம் குடுங்க... அப்படியே ரூ. 50 லட்சம்... நிவாரணத் தொகை அவங்க குடும்பத்துக்கும் கொடுத்தால் போதும்.


MADHAVAN
ஜூன் 20, 2024 17:10

அவனுங்களே கள்ளச்சாராயம் குடித்து சாவுறானுங்க


karthic
ஜூன் 20, 2024 16:32

பூரண மது விளக்கு கொண்டு வரவேண்டும் . கொண்டு வருவதற்கு சிக்கல் இருந்தால் அதை புறம் தள்ளிவிட்டு அடுத்த தலைமுறையினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு இதை இப்போதே செயல் முறை படுத்த வேண்டும் .


angbu ganesh
ஜூன் 20, 2024 16:21

என்னது முன்னெச்சரிக்கையாவா அரசுக்கு இதெல்லாம் நல்ல தெரியும்,


Muralidharan S
ஜூன் 20, 2024 15:59

பலி நடந்தது எப்படி - very simple.. 60 வருஷம் மாற்றி மாற்றி திரவிஷா ஆட்சி.. வேற என்ன உருப்படியாக நல்லது நடக்கும் ??.. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்லது ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி விடுவது நல்ல அரசாங்கத்திற்கு ஒரு வழி.. அப்படி சிந்திக்க வே ண்டும்


Muralidharan S
ஜூன் 20, 2024 15:53

எங்கே பார்த்தாலும் கணவனை இழந்த பெண்கள் என்று சென்ற ஆட்சியில் போலி கண்ணீர் விட்டவர் எங்கே காணோம்... .


venugopal s
ஜூன் 20, 2024 14:46

பூர்ண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 2009 ல் நூற்று முப்பத்தி ஐந்து பேர் மற்றும் 2022 ல் நாற்பது பேர் இறந்ததை பாஜகவினர் இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டனரா?


DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 20, 2024 15:44

குஜராத் ல எப்போயே செத்து இருந்தா ..தமிழ்நாட்டிலும் சாகலாம் மா


Ganapathy Subramanian
ஜூன் 20, 2024 15:48

அதனால் இங்கே நாற்பது பேர் இறந்ததை சகித்துக்கொள்ளலாம் என்கிறீர்களோ?


Venkatesh
ஜூன் 20, 2024 17:55

எதற்கெடுத்தாலும் பாஜக வை குறை சொல்வதை மட்டும் வழக்கமாக வைத்து இருக்கும் உங்களை போன்ற ஆட்களையும், அவ்வப்போது கருத்து சொல்லி திராவிட மாடல் ஆட்சியில் தவறு என்றால் மட்டும் வாயையும் மூடிக்கொண்டு இருக்கும் நடிகர், நடிகை இன்ன பிற சினிமா பிரபலங்களையும், எதைக்கொண்டு அடிக்கலாம்?


ram
ஜூன் 20, 2024 14:44

என்னமோ திருட்டு திமுகவுக்கு வோட்டு போட்ட மக்கள் சந்தோசம் எமக்கு அது போதும் அடுத்த தேர்தலில் அவர்களை அமோகமாக ஜெயிக்க வைத்து விடுங்க, இதுபோல நிறைய சந்தோஷங்கள் ஏற்படும்.


Velan
ஜூன் 20, 2024 14:41

எல்லாம் மாமூல் வாங்கிட்டு விற்பன அதிகார மையம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை