உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளிடம் ஆற்றில் ஆமைவேகத்தில் கதவணை அமைக்கும் பணி

கொள்ளிடம் ஆற்றில் ஆமைவேகத்தில் கதவணை அமைக்கும் பணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. வெள்ள காலங்களில் சேமிக்கவும், கடல் நீர் உட்புகுவதை தடுக்கவும், கதவணை அமைக்க விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி, குமாரமங்கலம்- -- ஆதனுார் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க, 2014ல் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.அதன்படி, 2019ல், அங்கு 463 கோடி ரூபாயில் பிரமாண்டமான கதவணை அமைக்கும் பணி துவங்கியது.பொதுப்பணித்துறை கும்பகோணம் கோட்டம் சிறப்பு திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம், 1 கி.மீ., நீளத்தில், கதவணை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த கதவணை வழியாக, 4 லட்சத்து 64,000 கனஅடி வரை உபரிநீரை பாதுகாப்பாக கடலுக்கு அனுப்ப முடியும். கதவணையில் உள்ள, 84 மதகுகளை அடைத்து, 1.4 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஏழு மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலோர பகுதிகளான சீர்காழி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில், 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்கு கதவணை வாயிலாக தீர்வு ஏற்படும்.மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், 26,000 ஏக்கர், கடலுார் மாவட்டத்தில், 29,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.ஒப்பந்தப்படி, கதவணை கட்டுமான பணிகள் 2022ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், நில ஆர்ஜிதம், கொரோனா, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. தற்போதைய நிலையில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் முழுமையாக முடிவடையாததால், தற்போது கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்துள்ள தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது.அரசு விரைந்து பணிகளை முடித்து கதவணையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், கொள்ளிடம் ஆற்றில் 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு கதவணை அமைக்க வேண்டும் என, விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஆக 05, 2024 21:52

இவர்களாவது ஆமை வேகத்தில் வேலை செய்கிறார்கள். அங்கு டெல்லியில் இருப்பவர்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்து விட்டோம் என்று பச்சையாக பொய் சொல்லிக் கொண்டு இருக்கின்றனரே,அவர்களை என்ன செய்வது?


அப்பாவி
ஆக 05, 2024 18:48

கதவணை கட்டறேன்னுட்டு கோடி.கோஇயாய் ஆட்டையப் போடுவாங்க. ஒரு தடுப்பணை கட்டக்கூட தகுதியில்லாத தத்திகள். மூணுமாசத்தில் புட்டுக்கிச்சு. பேசாம ஒதுக்கப்பட்ட பணத்தை கள்ளச்சாராயம்.குடிச்சு சாவறவங்களுக்கு குடுக்கலாம்.


R.Krishnakumar
ஆக 05, 2024 15:55

காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை, ஒன்றும் செய்ய முடியாது


Narayanan
ஆக 05, 2024 15:09

மெரினா பீச்சில் இருக்கும் சமாதிக்கு வேகமாக பணிகள் நடக்கும். ஆனால் இந்த மாதிரி அத்தியாவசியமான பணிகள் நடக்காது . தமிழகத்து சாபக்கேடு . வங்காள தேசத்தில் ஜனாதிபதியையே வீட்டுக்கு மக்கள் அனுப்பிவிட்டார்கள் . ஆனால் நாம் ஒட்டு போட்டு அரவணைக்கிறோம்


pandit
ஆக 05, 2024 12:25

இதுவரை மண் கொள்ளையிலேயே காலம் போய்விடும். இது வெறும் கண் துடைப்பு நாடகம். பணத்திற்காக


V RAMASWAMY
ஆக 05, 2024 11:16

திட்ட அறிவிப்பு வரும், இவ்வளவு கோடி ரூபாயிலென்று. ஆட்டைக்கு தயார். ஆரம்பம் அமர்க்களாமாயிருக்கும், இதிலும் ஆட்டை. அவ்வளவுதான், ஆட்டைக்குப்பின் உபரியிருந்தால்தானே, திட்டம் பூர்த்தியாக்கமுடியும்? இதற்குள் இரண்டு மூன்று மழைக்காலமா முடிந்து, வழக்கமாக கர்நாடாக மாநிலத்திற்கு ஒப்பாரி ஆரம்பவாகிவிடும். இது தான் தி. மா.


MUTHUMANI S
ஆக 05, 2024 11:02

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .புதியதாக டெண்டர் விட்டால் தான் நாங்கள் கமிஸன் வாங்கமுடியும் "திருடர்கள் மாடல் ஆட்சி"


Ethiraj
ஆக 05, 2024 10:25

Govt busy with Racing event which is priority


hari
ஆக 05, 2024 10:12

aiims காக கூவும் கொத்தடிமைகளுக்கு இது தெரியாது......


hari
ஆக 05, 2024 10:11

முயல் ஆமை கதையில் ஆமை வென்றது... அதன் அர்த்தம். வேறு.... இங்கு அந்த ஆமையை பயன்படுத்த வேண்டாம்.... சீர்க்கெட்ட ஆட்சி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை