உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வலுவான கூட்டணியில் இடம் பெறுவோம் கிருஷ்ணசாமி நம்பிக்கை

வலுவான கூட்டணியில் இடம் பெறுவோம் கிருஷ்ணசாமி நம்பிக்கை

கோவை:லோக்சபா தேர்தலில் மாநில மக்கள் நலன் கருதி வெற்றி பெறும் வலுவான கூட்டணியில் இடம் பெறுவோம் என புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவை குனியமுத்தூரிலுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் இல்லத்தில் அவரது தலைமையில் கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூட்டம் நடந்தது.மாநிலம் முழுவதும்இருந்து 130 நிர்வாகிகள்பங்கேற்றனர். இதில் லோக்சபா தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்த முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:இவ்வாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் மிக முக்கியமான காலகட்டத்தில் நடக்கிறது. வலுவான கூட்டணி என்பது எண்ணிக்கையிலும் வெற்றிக்கான முகாந்திரமும் கொண்டதாகும். மாநில மக்கள் நலன் கருதி அத்தகைய கூட்டணியில் வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு இணைய முடிவெடுக்கப்படும்.நாங்கள் இரண்டு அல்லதுமூன்று தொகுதிகள் கேட்போம். நாங்கள் வெற்றி பெற வேண்டும். இம்முறை நாங்கள் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் இடம்பெற வேண்டும். பிரதமர் வேட்பாளரை கூறி தேர்தலை இதுவரை நாடு சந்தித்ததில்லை.அண்ணாமலை கூட்டணிக்காக கதவுகள் திறந்திருப்பதாக கூறியிருப்பது அனைவருக்கும் பொதுவானதாகும். பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பது குறித்து கேட்டதற்கு ''நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறக்க நிலைக்கு சென்றுவிட்டார். எழுந்தவுடன் பேசுவோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி