மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
26 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
34 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
37 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
45 minutes ago
திருநெல்வேலி : கூடங்குளத்தில் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் கடற்கரை கிராமத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டுஅணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. முதல் அணுஉலையின் கட்டுமான பணி முடிந்து வரும் டிசம்பரில் மின் உற்பத்தி துவங்க உள்ளது. அணுஉலை செயல்படும்பட்டால் கிராம மக்கள் குடியிருப்புகளை காலி செய்யவேண்டிவரும், மீனவர்கள் மீன்பிடிக்க தடை ஏற்படும் என சுற்றுவட்டார கிராமங்களில் பீதி நிலவுகிறது. எனவே கடந்த சில தினங்களாக அங்கு கடையடைப்பு, உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடந்தன. நேற்று இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரத்தில் இடிந்தரை, கூடங்குளம், செட்டிகுளம் என சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர். கூடங்குளத்தையொட்டியுள்ள மீனவ கிராமத்தினர் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. இடிந்தகரையில் பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். பள்ளிகளுக்கு செல்லவில்லை. இன்று 17ம் தேதி கூடங்குளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகின்றனர்.
26 minutes ago
34 minutes ago
37 minutes ago
45 minutes ago