உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக எம்.பி., ஆ.ராசாவிடம் ஓட்டு கேட்ட அதிமுக.,வினர்

திமுக எம்.பி., ஆ.ராசாவிடம் ஓட்டு கேட்ட அதிமுக.,வினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்: அதிமுக.,வினர் ஓட்டு கேட்டு நோட்டீஸ் வழங்கிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் சென்ற நீலகிரி வேட்பாளரும், திமுக எம்.பி.,யுமான ஆ.ராசாவிடமும் நோட்டீஸ் வழங்கி ஓட்டு கேட்டனர்.ஊட்டி சாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த திமுக எம்.பி., ஆ.ராசாவை பார்த்து, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க., தொண்டர்கள், ''போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து'' என கோஷம் போட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lh12uwkl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடியாக காரை நிறுத்திய ராசா, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ''பா.ஜ., வெற்றி பெற்றுவிடவே கூடாது'' என்றார். அவருக்கு அ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வழங்கினர். இதனிடையே ராசா, பேசிக்கொண்டு இருந்தபோது தி.மு.க., தொண்டர் ஒருவர், தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு எதிர் கோஷம் எழுப்பினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pugazh
ஏப் 11, 2024 21:36

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை,பாஜக வெற்றியை தடுக்க பங்காளிகள் ஒன்று சேர்வது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!


RRatz
ஏப் 11, 2024 21:08

என்ன செய்தாலும் ஸரி:Modiji மறுபிறவி PM உறுதி MODIJI is better to others


Nagarajan D
ஏப் 11, 2024 21:05

ஒரு பண்ணாடை இன்னொரு பண்ணாடையிடம் நமக்குள் பங்காளி சண்டை தான் நம்மில் யார் ஜெயித்தாலும் பங்கு பிரித்துக்கொள்ளலாம் பிஜேபியை மட்டும் இங்கே வளர விடக்கூடாது என பேசி திரியுதுங்க


Sivak
ஏப் 11, 2024 20:40

நீயும் திருடன் நானும் பக்கா திருடன் பாஜக மட்டும் வரவே கூடாது வந்த நம்ம மாட்டிக்குவோம்


sundarsvpr
ஏப் 11, 2024 20:27

உண்மையான போட்டி இரண்டாம் இடத்திற்கு யார் என்பதில்தான் பி ஜெ பி வரக்கூடாது என்று ஆ ராசா கூறுவதிலிருந்து நிச்சியம் ஆகிவிட்டது


Ramesh Sargam
ஏப் 11, 2024 20:02

இவர் கிட்ட போயி வோட்டு கேட்ட அந்த திமுகவினருக்கு கொஞ்சம்கூட எதுவும் இல்லை என்ன மனித பிறவிகளோ அவர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை