உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர்: திருமாவளவன்

பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர்: திருமாவளவன்

சென்னை : தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் நேற்று, பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: இந்த தேர்தல், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும், மக்கள் நடத்தும் அறப்போர். சங் பரிவாருக்கும்,- மக்களுக்கு இடையே நடக்கும் போர். இதில், மக்கள் நம் பக்கம் இல்லை; நாம் மக்கள் பக்கம் நிற்கிறோம். முதல்வர் ஸ்டாலின், இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய அளவில் வியூகம் வகுத்து, இந்த தேர்தலை வழிநடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தான், இவ்வளவு நெருக்கடிகளை சகித்து கொண்டு, எதிர்க்கட்சிகள் பக்கம் நிற்கிறார். ஜனதா என 1977ல், வரலாறுமிக்க ஒரு கூட்டணியை, முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்தார். அன்று, காங்., கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய சூழல் இருந்தது. அதேநிலை, 2024ல் உருவாகியுள்ளது.தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது அல்ல; தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல நோக்கம். இந்தியா முழுதும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்; மக்களை காப்பாற்ற முடியும்.மோடி, மீண்டும் பிரதமரானால், ரேஷன் கடைகள் இருக்காது; 100 நாள் வேலை திட்டம் இருக்காது; தேர்தல்கள் இருக்காது; இட ஒதுக்கீடு இருக்காது. மகளிர் உரிமை தொகை தர முடியாது.மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது கற்பனை அல்ல; அவர்களே வெளிப்படையாக பேசுகின்றனர். பா.ஜ., கூட்டணி, 400 இடங்களில் வெற்றி பெற்றால், ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 178 )

Krishnamoorthy Perumal
மே 13, 2024 19:16

உமது வாக்கு பலிக்கும்


Kumar
ஏப் 15, 2024 22:16

சந்தோசமான விசயம்


sundarsvpr
ஏப் 15, 2024 20:05

எதுவும் இருக்காது உண்மைதான் இந்திய தேசம் மட்டும் நிற்கும் ஆனால் I N D I A கலைந்துவிடும்


ArGu
ஏப் 15, 2024 16:41

கண்டிப்பா நடந்துரும் தானே? மறுபடி மாத்தி எல்லாம் பேச கூடாது


Anbuselvan
ஏப் 15, 2024 12:58

பச்சை பொய் சொல்ல இவர்களிடம்தான் பழக வேண்டும்


S.V.Srinivasan
ஏப் 15, 2024 09:57

என்னங்க இவரு போட்டு கொடுக்குறாரு சுடாலின் ஜாக்கிரதை


Krishnamoorthy Perumal
ஏப் 15, 2024 08:43

நல்ல விஷயம் தானே இது தமிழக மக்களும் எதிர்பார்த்த ஒன்றே


Ganesun Iyer
ஏப் 14, 2024 23:05

கருநாக்கு பலித்தால் மகிழ்ச்சி


Sivagiri
ஏப் 14, 2024 22:49

ஐய - அதெல்லாம் அந்த காலம் - இப்போ ஆட்சியை கலைக்க மாட்டாங்க - ஆனா ஆளை அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிக்கிட்டு - அதோட , மத்தவங்களை தங்கள் பக்கம் இழுத்து வச்சிக்கிட்டு , ஆட்சியை அவங்க நடத்துவாங்க - உங்கள மாதிரி கூட்டாளிங்களை ஈ-டி , ஐடி , என் எஸ் ஏ , சிபிஐ , இப்பிடி கோடாங்கி அடிச்சு பேய் ஓட்றா மாதிரி ஒட்டீருவாங்க - அவ்வளவுதான் - யாரும் ஒன்னும் பண்ண முடியாது , கோர்ட்ல எல்லாம் பப்பு வேகாது - இதுதான் இப்போ பிஜேபி மாடல் - இதெல்லாம் உங்களுக்கு புரியிறதுக்குள்ள அடுத்த எலெக்சன் வந்துரும் , அவ்வளவுதான் , கெஜவால் கதைதான் - நீண்டுக்கிட்டே போகும் -


Rpalnivelu
ஏப் 14, 2024 21:24

குருமாவுக்கு கரி நாக்கு பலித்தே விடும் குருமாவட வரும் பின்னே, ஏழரை வரும் முன்னே அய்யகோ உடன்பருப்பே கேட்டாய்யா அவன் பேச்சை உடல் பதறுகிறது நெஞ்சம் துடிக்கிறது அவனை விட மாட்டேன் என நீ சொல்வது ஏன் காதில் கேட்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை