மேலும் செய்திகள்
பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு
11 hour(s) ago
தினமலர் வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
11 hour(s) ago
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்ததில் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற 2 பேர் பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர். மதுரை சக்கிமங்கலத்தில் இருந்து கள்ளிக்குடி மருதங்குடியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலி அமைப்பதற்காக சிமெண்ட் தூண்களை ஏற்றிக் கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தனர். லாரியை மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பழனிவேல் ஓட்டி வந்தார். லாரியின் மேல் பகுதியில் மதுரை விளத்தூர் காலனியைச் சேர்ந்த சன்னாசி, குண்டுமலை, செந்தில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கிருஷ்ணன் , மேலூரைச் சேர்ந்த செல்வம் அமர்ந்திருந்தனர். தோட்டத்திற்கு செல்லும் வழியில் ரோடு மிகவும் மோசமாக இருந்ததால் லாரி ஒரு பக்கமாக கவிழ்ந்துவிட்டது. இதில் லாரியின் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். அவர்கள் மீது லாரி விழுந்து அமுக்கியதில் சன்னாசி, குண்டுமலை இறந்துவிட்டனர். காயமடைந்த செந்தில், கிருஷ்ணன், செல்வம் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago