மேலும் செய்திகள்
மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை
3 minutes ago
மூன்று நாட்கள் பழனிசாமி பிரசாரம்
35 minutes ago
விஜய் இணைந்தால் வெற்றி சுலபமாகும்
35 minutes ago
வானுார்: ஆரோவில்லில் வீடு புகுந்து வௌிநாட்டினரிடம் பணம் திருடிய மரக்காணம் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சர்வதேச நகரமான ஆரோவிலில் ரேவ் கெஸ்ட் அவுஸ் உள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த பால் டி பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி இரவு வீட்டின் அறையில் துாங்கியுள்ளார்.மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, ஹாலில் மேஜையில் வைத்திருந்த ரூ. 2 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.இதுகுறித்து பால் டி பேபி அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ரோந்து சென்ற போலீசார், இடையஞ்சாவடி சாலையில் சந்தேகிக்கும் வகையில் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர், 50; என்பதும், இவர் கடந்த 2ம் தேதி ஆரோவில் ரேவ் கெஸ்ட் அவுஸ் அறையில் புகுந்து ரூ.2 ஆயிரமும், கடந்த 6ம் தேதி ஆரோவில் கிரேட்டிவிட்டி பகுதியில் வெளிநாட்டினர் வசிக்கும் ஒரு வீட்டில் புகுந்து ரூ. 36 ஆயிரம் பணத்தை திருடியது தெரிய வந்தது. மேலும் இவர் மீது கோட்டக்கும் போலீசில் திருட்டு வழக்கு இருப்பது தெரிய வந்தது.அதன்பேரில், சங்கரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த ரூ. 15 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
3 minutes ago
35 minutes ago
35 minutes ago