உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகங்கையில் எதிரிகளை ஓரங்கட்டும் கார்த்தி எம்.பி.,: தி.மு.க., ஆதரவில் ஜெயிக்க திட்டம்

சிவகங்கையில் எதிரிகளை ஓரங்கட்டும் கார்த்தி எம்.பி.,: தி.மு.க., ஆதரவில் ஜெயிக்க திட்டம்

சிவகங்கை : சிவகங்கை தொகுதியில் கார்த்தி எம்.பி.,யின் கை' ஓங்கி வருவதால், அவரை எதிர்த்து குரல் கொடுத்த காங்., நிர்வாகிகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.எம்.பி., தேர்தல் களம் துவங்குவதற்கு முன்பிருந்தே, சிவகங்கை தொகுதியில் மீண்டும் கார்த்திக்கு சீட் வழங்க கூடாது என்பதில், காங்., மூத்த நிர்வாகிகளான முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனியப்பன், சில வட்டார தலைவர்கள் உட்பட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.காங்.,ல் கார்த்திக்கு எதிரான கோஷ்டிகளை ஒன்றிணைத்து சத்தியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தினர். அதற்கான பேனர்களில் கூட முன்னாள் அமைச்சர் சிதம்பரம், கார்த்தி எம்.பி.,யின் படங்களை வெளியிடாமல் புறக்கணித்தனர். இது குறித்து கட்சி தலைமை வரை புகார் சென்றது.இதன் வெளிப்பாடாகவே கார்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி, மாவட்ட தலைவராக தனக்கு ஆதரவாளரான சஞ்சய்காந்தியை நியமித்தார். தற்போது தனக்கு எதிராக செயல்பட்ட நகர் தலைவர்களையும் மாற்றி, சிவகங்கை உட்பட 5 நகர் தலைவர்களாக தனக்கு சாதகமானவர்களை நியமிக்க செய்தார். இது போன்று தொடர்ந்து கார்த்தியின் கை ஓங்கி வருவதால், அவரை எதிர்த்து களம் இறங்கிய காங்., கட்சியினரின் நிலை என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய அமைச்சர் சிதம்பரமும், வரும் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்திக்கு எதிராக காங்., கட்சியினர் செயல்படக்கூடும் என்ற காரணத்தினாலேயே மாநில தலைவராக இருந்த அழகிரியை மாற்றி, தனது ஆதரவாளரான செல்வபெருந்தகையை தலைவராக்கினார். அவர் மூலம் காங்., கட்சியில் தனக்கு சாதகமாக காய்களை நகர்த்தி, தி.மு.க., வினரின் ஆதரவோடு மீண்டும் கார்த்தியை எம்.பி.,யாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிதம்பரத்திற்கு இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

கார்த்திக்கு எதிராக காங்.,ல் உள்குத்து

காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது, கார்த்திக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர், நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு அவர்களுடன் இணைந்து செயல்படுவதாக இருந்தாலும், மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கட்டாயம் மீண்டும் கார்த்தியுடன் இணைய மாட்டார்கள். அப்படியே இணைந்தாலும், தேர்தலின் போது அவருக்கு எதிராக உள்குத்து வேலைகளை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை