மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
27 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
35 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
38 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
46 minutes ago
சென்னை: ''சட்டசபையில் நேரம் இன்மை காரணமாக, உறுப்பினர்கள் பேச நினைத்த கருத்துக்களை பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அக்கருத்துக்களை சட்டசபை குறிப்புகளில் பதிவு செய்ய அனுமதிக்க ÷வண்டும்,'' என, சட்டசபையில் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, 'உறுப்பினர்களின் கருத்துக்கள், சபை குறிப்புகளில் பதிவு செய்யப்படும்' என, சபாநாயகர் அறிவித்தார்.சட்டசபையில், உறுப்பினர்கள் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு, தொகுதி பிரச்னைக்கு வரும்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிடும். இதுபோன்ற நேரத்தில், 'உறுப்பினர்கள் பேச இருந்த ÷காரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்துவிடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்' என, சபாநாயகர் கூறிவிடுகிறார்.ஆனால், சட்டசபையில், தொகுதி பிரச்னைகளை பேச முடியவில்லையே என்ற ஏக்கம் உறுப்பினர்களிடம் இருக்கிறது. இதை உணர்ந்த முதல்வர், நேற்று, 'தொகுதி பிரச்னையை சட்டசபையில் பேசினேன் என்பதை மக்களுக்கு காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உறுப்பினர்களுக்கு இருக்கிறது. ஆனால், ÷நரம் முடிந்துவிட்டது என்று நீங்கள் (சபாநாயகர்) கூறுகிறீர்கள். உறுப்பினர்களுக்கு உள்ள தர்மசங்கடத்தை கருதி, அவர்களின் கோரிக்கைகளை சபைக் குறிப்புகளில் பதிவு செய்ய, நீங்கள் நடவடிக்கை எடுக்க ÷வண்டும்' என்றார்.முதல்வரின் கோரிக்கையை ஏற்று, 'உறுப்பினர்களின் கோரிக்கைகள், சபைக் குறிப்புகளில் பதிவு செய்யப்படும்' என, சபாநாயகர் அறிவித்தார்.
27 minutes ago
35 minutes ago
38 minutes ago
46 minutes ago