உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை

அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் குறித்து, அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். பின், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடந்தது.அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதமாவதற்கு அரசு காரணம் என்ற தகவல் வெளியாகிறது. இதற்கு அரசு காரணமல்ல. இத்திட்டத்தில் ஆறு பம்பிங் ஸ்டேஷன் உள்ள நிலையில், முதல் மூன்று பம்பிங் ஸ்டேஷன் இடையேயான நிலம் கையகப்படுத்தப்படாமல் இருந்தது.விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்தவும், கையகப்படுத்தவும் சம்மதிக்க செய்தோம். பணி நடக்க தி.மு.க., அரசு தான் காரணம். காவிரி அல்லது பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கலாம் என்று கூறுகின்றனர்; 1.5 டி.எம்.சி., நீரை எடுப்பது தான் முறை.ஆனால், விதிகளின் படி மட்டுமே நீரை எடுக்க முடியும். தற்போது தண்ணீர் குறைவாக இருக்கிறது. 1,045 குளங்களுக்கு தண்ணீர் செல்ல தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது.கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறக்கும் நிலையில், அதன்பின், 10 முதல், 15 நாட்களில் கசிவு நீர் கிடைக்கும். ஆறு பம்பிங் ஸ்டேஷன்களையும் ஒரே நேரத்தில் இயக்கினால் தான், அனைத்து குளங்களுக்கும் நீர் போய் சேரும். 70 நாட்கள் அதை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இது தான் திட்டம்.திட்டத்துக்கு, 1,416 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். இவர்களில், 100 விவசாயிகளுக்கு மட்டும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை தர வேண்டும். இத்திட்டத்தில், 1,045 குளங்களுக்கு மேல் சேர்க்க முடியாது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி பணி நடக்கிறது.பா.ஜ.,வினர் ஏற்கனவே இத்திட்டச் செயல்பாட்டுக்காக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அப்போது, அவர்களிடம் இதுபற்றி பேசி இருக்கிறோம். அவர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களுக்கு திட்டத்தில் உள்ள பிரச்னை குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளோம். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பா.ஜ.,வினர் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு, திட்டம் குறித்து நிலைமையை முழுமையாக யாரும் சொல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rengaraj
ஆக 05, 2024 10:43

பா.ஜ.க வின் உண்ணாவிரத போராட்டத்தை தள்ளிவைக்க அரசு கோரிக்கை விடுக்கிறது என்றால் அந்த திட்டப்பணிகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். பாஜக மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்றால் இதே போன்று மாநிலத்தின் ஒவ்வொரு தாலுகாவில் உள்ள பொது பிரச்சினைகளுக்காக தெருமுனை விளக்க கூட்டங்கள் நடத்தி, மாவட்ட ஆட்சியர் நடத்தும் மக்கள் குறைதீர் கூட்டங்களுக்கு சென்று மகஜர் அளித்து பொது மக்களுக்காக போராட வேண்டும். அதையும் மீறி பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இதேபோன்று அமைதியான வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்கவேண்டும். மத்திய அரசின் திட்டங்களிலோ அல்லது மாநில அரசின் திட்டங்களிலோ ஊழல் நடைபெறுகிறது என்றால் கட்சிசார்பாக பொதுநல வழக்குகள் தொடுக்க வேண்டும். அதற்கு அகில இந்திய பாஜ தலைமை மாநிலத்தலைமைக்கு போதுமான அதிகாரங்கள் தரவேண்டும்.


v j antony
ஆக 05, 2024 08:58

அரசு காரணமல்ல ஆனால் இன்னும் நிலம் எடுக்கப்படாமல் உள்ளது இழப்பீடு கொடுக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் யார் செய்வார் அமைச்சர் அவர்களே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறார் மேட்டூர் அணையும் பவானி ஆறும் கரை புரண்டு ஓடுகிறது அமைச்சர் அவர்களே இலவச திட்டங்களை நிறைவேற்றி ஓட்டு பெறுவதால் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு போதிய நிதியோ கவனமோ அரசு செலுத்துவதில்லை


N.Purushothaman
ஆக 05, 2024 07:38

ரெட்டை இலை என்ன செய்து கொண்டு இருக்கிறது ? பிரதான எதிர்கட்சின்னு பீத்தல் வேற ...


Naga Subramanian
ஆக 05, 2024 06:30

ஒருவேளை அத்திக்கடவு என்ற பெயரிட்ட பாலிதீன் பைகளில் அத்திக்கடவு தண்ணீரை நிரப்பி விற்க முற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Kasimani Baskaran
ஆக 05, 2024 05:40

பட்ஜெட்டுக்கே இவர்கள் போராடும் பொழுது ஞாயமான ஒரு விசயத்துக்கு போராட்டம் நடத்தக்கூடாதா?


Mani . V
ஆக 05, 2024 05:03

ஆனால், குடிதண்ணீருக்கான போராட்டமாக இல்லாமல், சோமபானத்துக்கான போராட்டமாக இருந்தால் மிஸ்டர். முத்துசாமி உடனடியாக நிறைவேற்றுவார்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி