உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டு பாட்டா இருக்கணும்; கண்டக்டர், டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பாட்டு பாட்டா இருக்கணும்; கண்டக்டர், டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

நெல்லை: பஸ்களில் சாதியப் பாடல்களை ஒலிபரப்பினால் சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நெல்லை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாதி மோதல்

தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் ஒன்றாக நெல்லை இருந்து வருகிறது. சில ஆண்டுகளாக கல்லூரி முதல் பள்ளி மாணவர்கள் வரையிலும் சாதி மோதல்கள் நிலவி வருகின்றன. இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

சாதிப் பாடல்

இருப்பினும், ஆங்காங்கே இந்த சாதி வன்மம் இருந்து கொண்டேதான் உள்ளது. இந்த சூழலில், தான் பஸ்களில் சாதியப் பாடல்கள் ஒலிபரப்புவதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால், 2021ம் ஆண்டே, பஸ்களில் சாதியப் பாடல்களை ஒலிபரப்ப மாவட்ட போலீசார் தடை விதித்திருந்தனர்.

தடை விதிப்பு

ஆனால், அதன்பிறகும் சாதியப் பாடல்களை பஸ் பஸ்களில் தொடர்ந்து ஒலிபரப்பி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லையில் இயக்கப்படும் மாநகரப் பஸ்களில் சாதிய ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பினால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெல்லை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gurumurthy Kalyanaraman
ஆக 16, 2024 22:09

Indha பாடல் ஒளிபரப்பு தேவை இல்லாத ஒன்று. ஏகமாய் சௌண்டை வைத்து காதுகளை குடைந்து செவிடு ஆக்குவதை நிறுத்துவது தான் நல்லது.


தமிழ்வேள்
ஆக 16, 2024 16:35

பேருந்துகளில் பாடல் ஒலிபரப்பு தேவையில்லாத ஒன்று ...கவர்னர் அலெக்ஸாண்டர் நாட்களிலேயே அக்கப்போர் தாங்காமல் , தடைசெய்யப்பட்டது வரலாறு ....இரவுநேர தொலைதூர பேருந்துகளில் , ஓட்டுநர் நடத்துனருக்கு தூக்கம் வராமல் இருக்க அவர்களுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் ஒலி குறைவாக வைப்பது நலம் ......பயணிகளில் மாணவர்கள் நோயாளிகள் , அமைதிவிரும்பிகள் என பல ரகம் இருக்கும்போது , கேட்கசகிக்காத தரை ரேட் பாடல்களை ஒலிபரப்பி பயணிகள் , குறிப்பாக பெண்களின் முகம் சுளிப்படையும் வண்ணம் நடந்துகொள்வது கேவலம் ...இதில் தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் செய்யும் அலப்பறைகள் தான் மிக அதிகம்


Arul Narayanan
ஆக 16, 2024 13:54

பாட்டே எதற்கு? ஒட்டு மொத்தமாக தடை போட வேண்டியது தானே. அவரவர் செல் போனில் கேட்டுக் கொள்கிறார்கள். மேலும் கிராமங்களில் எப்போதும் பாட்டுச் சத்தமாக தான் இருக்கிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை