உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ., சோதனை

சென்னை, ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ., சோதனை

சென்னை: பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே'யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த ப்ரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 1ம் தேதியன்று குண்டு வெடித்தது. அதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து, சி.சி.பி., என்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை மண்ணடி, முத்தையால்பேட்டை, பிடாரியார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ராமநாதபுரத்திலும், 4 இடங்களில், சோதனை நடந்து வருகிறது.ராமநாதபுரத்தில் பருத்திக்கார தெரு, பட்டாணியப்பா தர்கா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை