உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாதுவில் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: துரைமுருகன் பதில்

மேகதாதுவில் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: துரைமுருகன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 'தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது' என்றார்.சட்டசபையில் இன்று (பிப்.,22) எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: மேகதாது விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v8dc39ug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

துரைமுருகன் பதில்

இதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. நீர் பங்கீட்டு பிரச்னைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்னை ஏதும் வரவில்லை. தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.,1ம் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது. மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது; ஓட்டெடுப்பு நடைபெறவில்லை. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு. மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

செங்கல்

தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது. பா.ஜ.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர். மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை. மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது. மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது. இவ்வாறு துரைமுருகன் விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ramesh Sargam
பிப் 23, 2024 00:41

ஆந்திரா அணை கட்டுகிறது. கேரளா அணை கட்டுகிறது. கர்நாடகா அணை கட்டுகிறது. அதற்கெல்லாம் தமிழ்நாடு மணல் அனுப்புகிறது. மொத்த மணல் in-charge இந்த துரைமுருகன்தான். பாலாற்றை வற்ற செய்த மகானுபாவரே இவருதான்.


Ramesh Sargam
பிப் 23, 2024 00:32

முதல் செங்கல்லை எடுத்து கொடுத்ததே இந்த திமுக தலைவர்தான். ஆனால், மக்களை ஏமாற்ற இந்த வீராப்பு பேச்சு. அந்த சின்னவன் கையில் பார்த்திருப்பீர்கள் ஒரு செங்கல்லுடன். அந்த செங்கல்தான் முதல் செங்கல் இந்த அணைகட்ட திமுக கொடுத்த பரிசு.


Ramesh Sargam
பிப் 23, 2024 00:04

தமிழகத்தின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை என்று அங்குள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். அதற்கு என்ன பதில் ...??


VENKATASUBRAMANIAN
பிப் 22, 2024 19:57

இப்படித்தான் கேஆர்எஸ அணை கட்டப்பட்டது. அப்போது திமுக தூங்கி கொண்டு இருந்தார்கள்


Suppan
பிப் 22, 2024 21:12

கே ஆர் எஸ் அணை கட்டப்பட்டது 1911 ல் .அப்பொழுது திமுக என்ற கட்சியே இல்லை. ஹேமவதி அணை கட்டப்படும் பொழுது திமுக அவர்கள் கட்டிக்கொள்ளட்டுமே என்றது


NicoleThomson
பிப் 22, 2024 19:33

ஆனால் நாம் அருவி என்று இயற்கையை சுரண்டலாம் , மண்ணின் வளத்தை கெடுக்கலாம்


Indhuindian
பிப் 22, 2024 18:51

செங்கலை வெச்சி பாருங்க அது காணாம போயிடும் நம்ம இளையதளபதி அந்த செங்கல்லை தூக்கினு வந்து அடுத்த தேர்தல்ல ஜனங்களுக்கு காட்டி எப்படி மேகதாதுவை கட்டமுடியும்ன்னு சொல்லுவார் நம்ம மு ப களும் நீட்டை யோசிக்கற மாதிரி இதையும் வோஷின்ஜிடம்ன்னு நம்பி ஓட்ட போடுவாங்க


vijay
பிப் 22, 2024 18:22

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பிஜேபி கட்சி, மற்றும் ஆணையம் மூலம் தடுக்கப்பபோவது மத்திய அரசு. முன்கூட்டியே அதற்கும் ஸ்டிக்கர் ஒட்டிவிட முயற்சி செய்யறாங்க இந்த தீயமுக கூட்டம்.


Kuppan
பிப் 22, 2024 17:35

ஒருவேளை கட்சின் சின்னம் மறுக்க சின்னம் வாங்க இப்பவே அடிபோட்டு அவங்க கட்சியில் ஆளாளுக்கு இதை பேசி மார்க்கெட்டிங் பண்ணுராங்களோ


M Ramachandran
பிப் 22, 2024 17:22

எப்படி மதுரை AIMS கட்டுமான செங்கல்லை தூக்கி கொண்டு வந்தது போலா


M Ramachandran
பிப் 22, 2024 17:20

அப்போ உங்கள் அனுமதியுடன் நிச்சயம் கப்பத்துடன் நிறை வேறும்


Suppan
பிப் 22, 2024 21:14

ஹி ஹி நாங்கதானே கல் மண் சப்ளை செய்வோம்'


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி