உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து

ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து

சிதம்பரம்,:'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம் என த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:'இண்டியா' கூட்டணி முரண்பாடின் மொத்த உருவமாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதான எதிர்க்கட்சி மற்றும் பல கட்சிகள் பங்கேற்காதது அவர்களது உண்மை முகத்தை மக்களிடம் பிரதிபலிக்கிறது.போக்குவரத்து துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாதது தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என த.மா.கா. கருதுகிறது.அடிக்கடி தேர்தல் நடத்துவதை மாற்றி செலவை குறைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பல கோடி ரூபாயை சேமிக்க முடியும்.தேர்தல் நெருங்கும்போது உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். நாட்டில் மூன்றாவது முறையாக பா.ஜ. ஆட்சிக்கு வருவது பிரகாசமாக உள்ளது. தமிழக கவர்னர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார்.இவ்வாறு வாசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை