UPDATED : ஆக 02, 2024 05:47 PM | ADDED : ஆக 02, 2024 05:43 PM
சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் எட்டு மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vq2xawk6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மலை மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும். மழை காலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறை கண்காணிப்பதுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.