உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ. விசாரணையில் 62 ஊழல் வழக்குகள் : நாராயணசாமி

சி.பி.ஐ. விசாரணையில் 62 ஊழல் வழக்குகள் : நாராயணசாமி

புதுடில்லி: சி.பி.ஐ.யிடம் 62 ஊழல்வழக்குகள் விசாரணை நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக லோக்சபாவில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் அலுவல விவகாரம், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம் தொடர்பான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி லோக்சபாவில் பேசியதாவது: லஞ்ச ஒழிப்பு தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் இன்றுவரை சி.பி.ஐ.யிடம் 169 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் கடந்த மூன்று மாதங்களில் 62 ஊழல் ‌தொடர்பான புகார் மனுக்கள் ஆகும். இவற்றினை விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் ஒப்புதலுக்காக காத்துள்ளது. தீர்க்கப்படாத வழக்குகளில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை, தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை எந்த வழக்குகளும் விசாரணை மட்டத்திலேயே இல்லை.சி.பி.ஐ.யினால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பின் அவர்களை பிடிக்க சட்டஆலோசனை பெறப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது. கோர்ட்டால் தடையாணை பெற்ற வழக்குகள் குறித்தும் தீவிரமாக பரிசீலித்து சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி