உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வுக்கு அனுமதி

கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு உளளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும். விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என, கோடநாடு ஊராட்சிமன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.இதனை விசாரித்த நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி வழங்கியது. மேலும், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜூன் 07, 2024 17:46

நீதிமன்றம் வழக்கை அனுமதித்தஉடன் முதலில் கட்டடம் அரசு அதிகாரிகள் பொறுப்பில் எடுக்க வேண்டும். சசிகலா விற்கு கொடநாடு எஸ்டேட் சொந்தமா என்று வருவாய் துறை உறுதி செய்ய வேண்டும். கட்ட மதிப்பு, இடிக்க பொது பணி அறிக்கை தேவை. ஆணையர் தான் வரி விதிப்பு குறைபாடு அறிக்கை தரவேண்டும். இதனை ஊராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்க, தீர்மானிக்க மட்டும் தான் நிறைவேற்ற மன்ற தலைவருக்கு அதிகாரம். அரசியல் ஊழலுக்கு தான் வழி வகுக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 20:04

எஸ்டேட் பங்குகளில் ஜெ சசி இருவருக்கும் சம அளவு உள்ளதாக செய்தி. ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக ஜெ வாரிசுகளுக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை