உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்

கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்

சென்னை : ''லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி தலைமை அறிவிக்கும் அறிவிப்பு தான் இறுதியானது,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறியுள்ளார்.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பேச்சு நடத்தி வருகிறது. இருப்பினும், தே.மு.தி.க., முன் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில், அ.தி.மு.க., உள்ளது.அதனால், கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதேபோல, பா.ஜ., தரப்பிலும் தே.மு.தி.க.,வுடன் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. இதுதொடர்பாக, பல்வேறு தகவல்கள் நேற்று பரவின. கட்சி தலைமையை தொடர்பு கொண்டு பலரும் கேள்வி கேட்டனர். இதையடுத்து, கூட்டணி தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 'லோக்சபா தேர்தல் தொடர்பாக, ஊடகங்களில் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளிவருகின்றன. தேர்தல் தொடர்பாக கட்சி தலைமை அறிவிக்கும் அறிவிப்பு தான் இறுதியானது' என்று பிரேமலதா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை