உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு மக்கள் முழு ஆதரவு

தி.மு.க.,வுக்கு மக்கள் முழு ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாற்பதும் நமதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியது போல் 38 ல் வெற்றியை நெருங்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுக மண்ணை கவ்வியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் பா.ஜ., இது வரை இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. , 7 தொகுதிகளில் அதிமுக 3 வது இடத்திற்கும் 3 தொகுதிகளில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுச்சேரி, வேலூர், தேனி, ராமநாதபுரம் தொகுதிகள் பா.ஜ.,வுக்கு 2 இடத்தை தந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=goj8mgcw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=030 தொகுதிகளில் அதிமுக 2வது இடத்தை பிடித்துள்ளது. பா.ஜ., கூட்டணி 10 தொகுதிகளில் 2 வது இடத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதால் பழனிசாமி எதிர்வினை முடிவை சந்தித்து இருப்பதாக அரசியலாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் , ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கட்கிள் இடம் பெற்றன. திமுகவை பொறுத்தவரை எப்போதும் உள்ள திமுக ஓட்டுக்கள் சிதறவில்லை. மேலும் சமீபத்திய பெண்களுக்கான உரிமைத்தொகை மாதம் ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டங்கள் வரவேற்பை பெற்று திமுகவுக்கு பெண்களின் ஆதரவு ஓட்டாக மாறியது.

அண்ணாமலையின் வியூகம்

பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் , சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி பா.ஜ.,வுடன் இணைக்கப்பட்டது. மேலும் பாட்டாளிமக்கள் கட்சி, வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரிவேந்தரின் இந்தியஜனநாயக கட்சி, ஏ.சி சண்முகத்தின் புதியநீதி கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், யாதவ மக்களை கொண்ட தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ.,வில் 8 அரசியல் கட்சிகளும் மேலும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்தன. பா.ஜ., தலைவர் அண்ணாமலையில் அரசியல் வியூகம், அவரது பிரசாரம், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் திமுக வின் ஊழல்கள் தொடர்பான பட்டியல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தமிழக மக்களை தன் பக்கம் திரும்பி பாரக்க வைத்தார். அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க., , புதிய தமிழகம் மற்றும் சில உதிரிகட்சிகளே இடம்பெற்றன. இதில் மிக ' வீக் 'கான கூட்டணியாக அதிமுக அமைந்தது. தனிப்பட்ட கருத்து வேறுபாட்டில் அண்ணாமலையுடன் பழனிசாமி மோதல் போக்கை கடைபிடித்தார். இதுவே இவருக்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது. இந்தியாவுக்கான தேர்தலில் யார் பிரதமர் என்று கை காட்டும் தேர்தலில் அதிமுக இந்த நிலைப்பாட்டை மறந்து தேர்தலை சந்தித்தது பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது என கூறலாம்.

சீமான் கட்சிக்கு ஓட்டு

நாங்க எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்ற சீமானின் நாம்தமிழர் கட்சிக்கு கணிசமாக எல்லா தொகுதிகளிலும் ஓட்டு கிடைத்துள்ளது. பல தொகுதிகளில் 3வது 4 வது இடத்திற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 105 )

Muthu Kumaran
ஜூன் 07, 2024 11:52

மக்களை ஏமாற்றும் விதை, சிலிண்டர் 500 ரூ , பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆண்டுக்கு 1 இலட்சம், வாக்குறுதி கொடுத்து பெற்ற வாக்கு


MADHAVAN
ஜூன் 07, 2024 11:14

இங்கு கருத்து போடும் சங்கிகளுக்கு உத்திரப்பிரதேசத்துல மண்ணைக்கவ்விய பிஜேபி பத்தி சொல்லுங்க, என்னமோ நாட்டுல இவனுங்க மட்டும்தான் யோக்கியன்மாதிரி, பிஜேபி ல இருக்குற 90 % பெரு கேசு இருக்குற பயலுவ


SRIRAM
ஜூன் 07, 2024 13:00

. Dmk. ? % குற்றவாளிகள்


Narayanan
ஜூன் 07, 2024 10:48

சென்றமுறையாக இருக்கட்டும் அல்லது இப்போதுபோல இருக்கட்டும் அத்துணை எம் பிக்களும் துரைமுருகன் சொன்ன மாதிரி கேன்டீனுக்கு போய் சமோசா சாப்பிட்டுவிட்டு வரலாம். அதை தவிர சல்லிக்காசு பொதுமக்களுக்கு பிரயோஜனம் இல்லை .


Vathsan
ஜூன் 07, 2024 18:18

பிஜேபி 4 MLA க்களும் சட்டசபை கேன்டீன்ல சமோசா திங்கதான் போறாங்களா?


V Manimaran
ஜூன் 06, 2024 10:35

ரொம்ப பக்கோடா சுட்டால் இப்படித்தான்...


Kannadasan
ஜூன் 06, 2024 07:19

சாதியவாதம் மதவாதத்தால் தீமுக வெற்றி பெற்றது. மேலும் கம்முனிஸ்ட் தலைவர்களும் திமுக கூட்டணியில் பெரும்பாலோனர் வேறு மாநிலத்தவர்கள். தமிழினத்தை 100 ஆண்டுகளாக வேற்றினத்தவரே ஆள்கின்றனர்.


Kannadasan
ஜூன் 06, 2024 07:10

திமுக பெற்ற வாக்கு 26% தமிழ்நாட்டில் திருடர்கள் 26%


naadodi
ஜூன் 05, 2024 19:03

திமுகவின் வெற்றி ஓர் மாயை. அதிமுக + பாஜக ஓட்டுக்கள் திமுகவை விட அதிகம். அண்ணாமலை கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருந்தால் பாஜக இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. Costly lesson.


durairajdheenadayalan
ஜூன் 05, 2024 17:21

உண்மையில் வின் நாம் தமிழர் கட்சி தான் .சிங்கிள் ரோல் இன் லோக்சபா எலெக்சன்.


s vinayak
ஜூன் 05, 2024 14:10

ஓசி, போதை இல்லாமல் இருக்க முடியாது.


Kumar
ஜூன் 05, 2024 12:40

மாக்களுக்கு 300 ஓவா குவாட்டர்,பீஷே இல்லாத ஒரு பிரியாணி அவ்ளோ தான்.30 திருடர்கள் கூட்டணி அவ்வளவே நம்பிக்கையுமில்ல தும்பிக்கையுமில்ல ராசா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி