உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுதல்

கோவையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்' என்றார்.கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் 4 முறை பேசியுள்ளார், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தது. தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா? கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்கள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ramasamy k
மார் 28, 2024 00:59

அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள்


Vijay Kumar
மார் 27, 2024 22:13

இதுவரை நல்லாதான் இருந்தோம் இனிநீங்க வந்தீங்க அப்புறம் எங்க நிலைமை...


Selvakumar Krishna
மார் 27, 2024 14:50

kovai residents will be happy Pray for DMK win


M.Saravanan
மார் 27, 2024 13:53

Wish You All The BEST Annamalai


Indian
மார் 27, 2024 13:38

If DMK win people will be happy so please pray for DMK win in election


Indian
மார் 27, 2024 13:38

thi mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm


Janarthanam K
மார் 27, 2024 13:06

Massive Victory for Annamalai Wish you all the very best Sir We are waiting for June th to welcome our great MP from COIMBATORE


Narayanan Muthu
மார் 27, 2024 12:38

bjp illamal irundhalae makkal nandraga iruppargal enbathai yaravadhu eduthu sollungalen


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை