மேலும் செய்திகள்
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
6 hour(s) ago | 1
சென்னை: ''மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, அவர்களுடைய உரிமை என்பது உணர்ந்து இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மற்ற நாட்களை போல் அல்லாமல் இது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பை வழங்கியதை நினைவு கூரும் நாள் இது. சமுதாயத்தின் அனைத்து பொறுப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக, 3,631 மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் பெற்று இருக்கிறார்கள். இது தான் திராவிட மாடல். திராவிட மாடல் அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்கி சம உரிமையுடன் சமூகத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.மாற்றுத் திறனாளிகளை உட்சேர்க்கும் சமூக முன்னேற்றமே உலக நாடுகளின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ஐநா அறிவித்துள்ளது. இந்த கருப்பொருளையே மையமாக கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை உயிர்மூச்சாக கொண்டு தமிழக சமூகம் முன்னேற்றப்பாதையில் நடைபோட்டு வருகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்ட முன் வடி தாக்கல் செய்த மறுநாள், மாற்றுத்திறனாளி தோழர்கள் என்னை ஆரத்தழுவி கொண்ட உணர்ச்சி பொங்கிய அந்த தருணமே, எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, அவர்களுடைய உரிமை என்பது உணர்ந்து இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதார மேம்பாடுக்கு, அரசு துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 4 இடஒதுக்கீடு முறையில் வழங்க உத்தரவிட்டு இருக்கிறோம். தனியார் துறையிலும் பணியில் அமர்த்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுடன் சேர்ந்து மாற்றித்திறனாளிகளும் புதிய வரலாற்றை படைக்கப் போகிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
6 hour(s) ago | 1