உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?

அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிப்ரவரி 2ம் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழகம் முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” எனும் பெயரில் நடைபயணத்தை கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நடைபயணத்தை பிப்ரவரி மாதத்தில் முடிக்க தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிப்ரவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மாநாடு இடம் இறுதி செய்யப்பட்டு பிரதமரின் வருகை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஆண்டில் 3வது முறையாக தமிழகத்திற்கு வருகிறார். ஏற்கனவே, ஜன.,2 மற்றும் ஜன.,19ல் தமிழகம் வந்திருந்தார்.விரைவில் மாநாடு இடம் இறுதி செய்யப்பட்டு பிரதமரின் வருகை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜன 23, 2024 06:14

இப்படி மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் தமிழக முதல்வருக்கு ஒரு சந்தேகம், தான் (ஸ்டாலின்) முதலமைச்சரா, அல்லது மோடி பிரதமர் மற்றும் part-time தமிழ்நாடு முதல்வரா என்று. தூக்கம் போச்சு ஸ்டாலின் அவர்களுக்கு. இதில், அவர் வாரிசு, அதான் அந்த உதவா நிதியை எப்படி துணை-முதலமைச்சர் என்று எப்படி அறிவிப்பது என்று ஒரே குழப்பம்.


sankaranarayanan
ஜன 23, 2024 00:01

அவர் தமிழகத்திலிருந்தே எம் பி பதவிக்கு இராமநாதபுரத்திலிருந்தே போட்டியிடலாம் திராவிட கட்சிகளுக்கு ஒரு பாடம் புகட்டி தேசிய ஒருமைப்பாடு வளரும் தமிழகம் காசி உத்திரப்பிரதேசம்போல இராமேசுவரமும் திகழும் னைவரும் அவரை வரவேற்றுங்கள்


Svs Yaadum oore
ஜன 22, 2024 20:59

இனி என்றும் எப்போதும் நடக்கப்போவது மோதி சாம்ராஜ்யம் .....இனி மத மாற்றிகள் ஆட்டம் எடுபடாது ..


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜன 22, 2024 19:51

ஆளுநர் ரவியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் ரவுண்டு கட்டி அடிக்கிற அடியை தாங்க முடியாம திமுககாரனுங்க மிரண்டு போய் இருக்கானுக இதுக்கு இடையில நிதியமைச்சர் நிர்மலா வேற பொழுது போகலைன்னா அப்பப்ப இங்க வந்து உபிஸ்களை சாத்தி விட்டு போகிறார் இந்த நேரத்தில் பிரதமர் வேற பிப்ரவரி மாதம் வர்றேன்னு சொல்லி மரண பயத்தை காமிப்பது என்ன நியாயம்? இப்படி திமுக உபிஸ்களை கேப் விடாம அடிச்சா பாவம் அவிங்களும் என்னதான் செய்வானுங்க எங்கதான் போவானுங்க?


rameshkumar natarajan
ஜன 23, 2024 10:17

This shows how bjp is scared about DMK and tamils.


Anbuselvan
ஜன 22, 2024 19:19

நடப்பதெல்லாம் பார்த்தா இவர் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடுவார் போல தெரிகிறதே. கன்னியாகுமாரியா கோவையா திருச்சியா ராமநாதபுரமா உதகமண்டலமா இல்லை தென்சென்னையா. பார்ப்போம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2024 19:11

டீம்கா இனி சரண்டர் ...... இப்படித்தான் கருத்து போடணும் ன்னு நினைச்சேன் ...... ஆனா நடக்கிறதே வேற ..... டீம்கா தான் அசிங்கப்பட்டாலும் பரவால்ல, திருடனை காப்பாத்தி வெச்சு சோறு போடுவேன் ன்னு போட்டுக்கிட்டு இருக்குது ...... பிஜேபியால ஒன்னும் பண்ண முடியல ....


வெகுளி
ஜன 22, 2024 18:39

மக்களின் உயிர் நாடி, மாண்புமிகு பிரதமர் மோடி.... வருகிறார் தமிழனை தேடி, வரவேற்போம் அவர் புகழ் பாடி...


Nachiar
ஜன 22, 2024 18:32

தர்மத்திற்கு சங்க நாதம் கொடுக்க வரும் அதே நேரத்தில் சிலருக்கு சங்கும் ஊதப்படும் . ஜெய் பாரத் ஜெய் சிவராம்.


மணியன்
ஜன 22, 2024 18:31

எப்படியாவது தமிழகத்தை ஊழல் கும்பல்களிடமிருந்து காப்பாற்றினால் சரி.


Nachiar
ஜன 22, 2024 18:30

ராம ஜெயம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி