மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பீர்ப்பள்ளியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடந்தது. இதில், காளைகளை அடக்க முயன்ற மற்றும் வேடிக்கை பார்க்க வந்த இருவர் படுகாயமடைந்தனர். சூளகிரி போலீசார் மற்றும் மேலுமலை வி.ஏ.ஓ., ராமர் ஆகியோர், எருது விடும் விழாவை நிறுத்துமாறு விழா குழுவினருக்கு அறிவுறுத்தினர்.ஆனால், போலீசார் மற்றும் வி.ஏ.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, 111 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னக்குத்தி வனப்பகுதி அருகே, நேற்று முன்தினம் மாலை, சேவல் சண்டை நடப்பதாக, பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, 24 முதல் 27 வயது வரையிலான நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, ஐந்து பைக்குகள் மற்றும் 2,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39