உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி,டி,பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000

சி,டி,பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000

சென்னை: சி.டி.,பிரிவு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: சி,டி,பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். மேலும் சி,டி, பிரிவை சேர்ந்த ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும். தொகுப்பூசிய பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ167.68 கோடி செலவாகும் இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R KUMAR
ஜன 06, 2024 01:03

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இருக்காது போல் இருக்கிறது


வெகுளி
ஜன 05, 2024 23:34

நல்ல புகைப்படம் ஒன்னும் தேறலயா?.... பொம்மை படம் போட்டிருக்கீங்க...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2024 20:52

யார் ஊட்டுப்பணம் ????


Palanisamy Sekar
ஜன 05, 2024 20:51

உலகவங்கியில் கடனை வாங்கி வாங்கி இப்போது மாநிலமே திவாலாகும் நிலைமைக்கு வந்துவிடும் என்கிறார்கள். இப்படி சுயதம்பட்டம் செய்ய வாரி வாரி வழங்குவது மாநிலத்துக்கே நல்லதல்ல. நிர்வாகமும் தெரியவில்லை ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரமும் கண்ணை மறைகின்றது போலும். ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ரெண்டுலட்ச ரூபாய் கடன் என்றால் இவரது நிர்வாக தருமை பூஜ்யத்துக்கும் கீழேதான் உள்ளது. பொருளாதார நிபுணர்கள் சொல்வதை செவிமடுக்க வேண்டும் ஸ்டாலின். இப்போது அன்றைக்கு வைகோ ஸ்டாலினை குறித்து விமர்சித்ததுதான் நினைவு வந்துபோகிறது.


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜன 05, 2024 20:47

அப்படியே அண்ணாமலைக்கு தெரியாமல் சொத்து சேர்ப்பது எப்படி என்று உங்கள் அமைச்சர் பெருமக்களுக்கும் சொல்லி கொடுங்கள் முதல்வர் அவர்களே..


M Ramachandran
ஜன 05, 2024 20:45

ராக்கொள்ளை பகல் கொள்ளை அடித்ததை திருப்பி விட்டால் மத்திய அரசிடம் உதவி கேட்க தேவையென இருக்காது


M Ramachandran
ஜன 05, 2024 20:42

அரசு ஊழியர்களுக்கு அள்ளி விடும் அரசு வக்கில்லாதவர்களை பற்றி மூச்சை காணோமாம் எல்லாம் தேர்தல் நெருங்கும் மகிமை.


Kundalakesi
ஜன 05, 2024 20:24

அரசே. சில ஆயிரம் நபர்களை குஷி படுத்துவதை நிறுத்தி தமிழ்நாடு கடனை அடைக்க வழியைக்காணுங்கள். மேலும் அரசு ஊதியம் பெறும் நபர்களுக்கு எதற்காக பொங்கல் இனாம்?


கல்யாணராமன்
ஜன 05, 2024 20:21

வேலையில் இருப்பவர்களுக்கு ரூ 1000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ 1500 குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ 2000 கொடுப்பது சரியாக இருக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை