உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் முன்னேற்றம்: சீனா

இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் முன்னேற்றம்: சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்: இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என சீனா கூறியுள்ளது.சமீபத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம். எல்லையில் நிலவும் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்பில் உள்ளன. இதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளின் நலனுக்கும், துடிப்பான மற்றும் நிலையான உறவு முக்கியம் என்பதில் சீனா உறுதி உடன் உள்ளது.இரு தரப்பு உறவுகளில் எல்லைப் பிரச்னையை சரியான முறையில் தீர்க்கவும், அதனை சரியாக நிர்வகிக்கவும் இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஏப் 14, 2024 09:02

ரெண்டு நாட்டுக்கும் தொழில் ரீதியான முத்லீடு வேணும்னா அமைதி தேவை. அதனாக்தான் இப்பிடி அறிக்கை உடறாங்க.


Jana T
ஏப் 13, 2024 13:42

வெரி குட்


ஆரூர் ரங்
ஏப் 13, 2024 12:42

இதுவரை இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையே வகுக்கப்பட்டவில்லை. வகுத்தாலும் அதனைக் கெடுக்க சீனக் கம்யூனிஸ்டுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள காங்கிரசும் துடைப்பமும் ரெடி.


Lion Drsekar
ஏப் 13, 2024 12:40

மிகவும் எச்சரிக்கை தேவை, நேரு காலம் முதல் நாங்கள் பார்த்து வருகிறோம் மத்திய அரசு இப்போது மாறியது போல் , இது ஒரு கானல் நீர் தோற்றம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை