உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் மீண்டும் உதிர்த்த கருத்து

மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் மீண்டும் உதிர்த்த கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான்; மதுவிலக்கு கொண்டு வைத்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்'' என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அப்போது சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், ‛‛மது குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அளவோடு மது குடிக்க அறிவுரை வழங்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என சொல்லாமல், அளவோடு குடிக்க சொல்வதாக கமல் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர் நடித்த ‛இந்தியன்-2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் கள்ளச்சாராயம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு கமல் அளித்த பதில்: கள்ளச்சாராயத்தை பற்றி பல இடத்தில் கூறியுள்ளேன். கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான். இது உடலுக்கு கெடுதல் என அனைவருமே மனதில் முடிவு செய்ய வேண்டும். விஷம் இது தான், இதனை உண்ணக்கூடாது என்னும் உணர்வு பொதுவெளியில் வர வேண்டும். அப்போது தான் இது போகும். மதுவிலக்கு பண்ணிவைத்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அதனால் கள்ளச்சந்தைகள் பெருகும், கள்வர்கள் பெருகுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

muthu
ஜூலை 09, 2024 19:40

As long as public themself consume liquors. and not stopping liquors consumption and govt too stops selling liquor , private gondas will sell illicit liquor for loan and later on grab your farm lands and houses


Senthoora
ஜூலை 09, 2024 13:35

மதுவிலக்கு வந்தால் மத்திய அரசே, மளிகை சாமான்கள், பெட்ரோல், மருந்து எல்லாவற்றையும் வரி கூட்டிவிடுவாங்க. திருடனாய் பார்த்து திருடன் திருந்தனும் மாதிரி, அவனவன் திருந்தானும், மதுவிற்ரால் வாங்கி குடிக்கணுமா? விஷமும் கடையில் விக்கிறாங்க.


Narayanan
ஜூலை 09, 2024 12:32

ஊடகங்கள் இனியும் கமலஹாசனுக்கு, அவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காதீர்கள். கொள்கையில் உறுதி இல்லாத ஜென்மம் வாழ்ந்தால் என்ன ?


Senthoora
ஜூலை 09, 2024 07:51

உண்மையை சொல்லுங்க, இங்கே எத்தனைபேர் மது அருந்தாதவர்கள் என்று.


R. THIAGARAJAN
ஜூலை 08, 2024 21:10

மீ டியர் கமல் கல்லு கடை காசுல தாண் கட்சி கடை கடை பிளாக் ஏறுத்து எனக்கு அரசியல் தெரியாது கடவுள் இருந்தா நல்ல இருக்கும் நீங்க உள்ளக நாயகன் மை விஷேஸ் ஒன்லி டு சினிமா. பாவம் ஏழை உயிர்கள் அரசியல் வேண்டாம். 10 லட்சம் பல கோடியாக உயிர்களின் உழைப்பு அந்த வலி உழைப்பவர்களால் மட்டுமே அறியும்


Ramesh Sargam
ஜூலை 08, 2024 19:33

ஆக இந்தியன் தாத்தா குடிகாரங்கள ஒழிக்க மாட்டார் போல தெரியுது…???


Senthoora
ஜூலை 09, 2024 07:49

அதை உங்க ஒன்றிய அரசுக்கு சொல்லுங்க, ஒரே இரவில் மதுவிலக்கு அமுலுக்கு வரும். மத்திய அரசுக்கு மதுவால்தான், மாநிலங்களில் இருந்து அதிக வரி வருகிறது,


sundarsvpr
ஜூலை 08, 2024 16:09

கமலஹாசன் கூறுவதில் தவறு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம்நாட்டு மரபு. இன்னொருவளை நாடி சென்றால் தவறு. இந்த கருத்தின் அடைப்படையில் அளவோடு குடித்தால் தவறு இல்லை.என்பது கமலின் அட்வைஸ்.


MADHAVAN
ஜூலை 08, 2024 11:31

சரியான கருத்துதான், அடுத்த தலைமுறை சிறிது சிறிதாக இந்த கேடு கட்டபழக்கத்தை குறைக்க வேன்டும்...!


Gurusamy
ஜூலை 08, 2024 10:39

திராவிட மாடல்


K V Ramadoss
ஜூலை 07, 2024 20:06

பொன்னான கமல் கருத்து


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை