உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய நல்லாசிரியர் விருது:திருச்சி ஆசிரியை தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது:திருச்சி ஆசிரியை தேர்வு

திருச்சி: தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, திருச்சி தஞ்சம்மாள் துவக்கப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருச்சி, சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தஞ்சம்மாள் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 35 ஆண்டாக பணியாற்றும் தலைமை ஆசிரியை விசாலாட்சி, 56.கடந்த 2009ம் ஆண்டு, இவருக்கு மாநில அளவிலான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அவருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 15 ஆசிரியர்கள் இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி விசாலாட்சியும் ஒருவர். ஆசிரியர் தினமான செப்., 5ம் தேதி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையால், விருது வாங்க டில்லி செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை