| ADDED : ஜூலை 26, 2011 12:44 AM
காரைக்குடி : அழகப்பா பல்கலை தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே 2011ல் நடந்த பி.எஸ்.சி., (கணிதம்), எம்.ஏ(தமிழ், ஆங்கிலம், வரலாறு), எம்.எஸ்.சி.,(கணிதம்), எம்.காம்.,(நிதி மற்றும் கட்டுப்பாடு), எம்.பி.ஏ.,(மருத்துவமனை நிர்வாகம்), தொழில் மேலாண்மையியலில் பி.ஜி., டிப்ளமோ, மனித வளமேலாண்மை மற்றும் தொழில் உறவு முறையில் பி.ஜி., டிப்ளமோ) தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை, மாணவர்கள் 'www.kalvimalar.com, '' மற்றும் 'www.alagappauniversity.ac.in'' 'வெப்சைட்டில்' காணலாம். முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தில் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ. 400 டி.டி., எடுத்து, பல்கலை தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு தேர்வாணையர் வெ.மாணிக்கவாசகம் தெரிவித்தார்.