உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனை மேலாளரை தாக்கிய 3 பேருக்கு காப்பு

மருத்துவமனை மேலாளரை தாக்கிய 3 பேருக்கு காப்பு

பட்டுக்கோட்டை: காதல் திருமணத்துக்கு இடையூறாக, வேலையில் இருந்து துாக்கிய தனியார் மருத்துவமனை மேலாளரை சரமாரியாக தாக்கிய ரவுடி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், வளவன்புரம் பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி, 36, தனியார் மருத்துவமனை மேலாளர். அதே, மருத்துவமனையில், காசாங்காடை சேர்ந்த அருண் பணியாற்றினார். அருணுக்கும், மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ய இருந்தனர். இந்நிலையில், அருணை வேலையை விட்டு, சாதிக் அலி நிறுத்தி விட்டார். இதை, சங்கரநாதர் குடிக்காடு பகுதியை சேர்ந்த மோகன், 25, என்பவரிடம் அருண் கூறியுள்ளார். இதையடுத்து மோகன், அவரது நண்பரும், ரவுடியுமான மணி, 28, மற்றும் ராகுல்காந்தி, 19, ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, சாதிக் அலி பைக்கில் சென்ற போது, தாக்கி, தப்பினர். இதில் சாதிக் அலி படுகாயமடைந்தார். பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிந்து, மணி, மோகன், ராகுல்காந்தி ஆகியோரை கைது செய்து, தப்பியோடிய அருணை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை