உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் விவகாரம்: யுடியூப் சேனல் மீது வழக்கு

சவுக்கு சங்கர் விவகாரம்: யுடியூப் சேனல் மீது வழக்கு

கோவை: பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர்.அவரை கோவை அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பல மணி நேரம் விசாரித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமார், 2:00 மணி நேரம் நடைபெற்ற வாதத்தின் முடிவில் நீதிபதி கோபாலகிருஷ்ணன், வருகிற, 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து, போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில், நள்ளிரவு 1:00 மணி அளவில் அடைத்தனர். இந்நிலையில், 'சவுக்கு ஆவேசம், போலீசா... பொறுக்கீங்களா... இப்படியும் செய்யுமா காவல்துறை' என்று பதிவிட்டு, சவுக்கு சங்கரின் பெண் போலீசார் குறித்து அவதுாறு வீடியோவை வெளியிட்ட யுடியூப் சேனல் 'ரெட்பிக்ஸ்' மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Bala
மே 06, 2024 21:05

சவுக்கு சங்கர் கையை துணி கட்டி அடித்து உடைத்துள்ளதாக அவரின் சட்டத்தரனி ஊடத்துக்குப் பேட்டி கொடுத்துள்ளார் அவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை - திராவிடியாக் கொலை கொள்ளைத் தெலுங்கு மாதிரியில் அழித்து ஒழிக்கப்படும் காலம் விரைவில்


rsudarsan lic
மே 06, 2024 19:51

யு டியூப் என்ன கழிசடை விடீயோக்களை வைத்துள்ளது கூகுளுக்கு வெட்கக்கேடு


Vaduvooraan
மே 06, 2024 19:00

சவுக்கு சங்கர் ஊடகவியலாளரா? அடேடே யாரும் சொல்லவே இல்லையே? பழைய டிப்பார்ட்மெண்ட் தொடர்புகளை பயன்படுத்தி அதை புலனாய்வு என்கிற பெயரில் விற்றுவந்த தற்குறி வியாபாரி என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்? இதுதான் நவீன ஊடகவியல் போலும்?


Vaduvooraan
மே 06, 2024 18:54

நமது அரசியலின் வீழ்ச்சிக்கான அடையாளம் திமுக என்றால், நமது ஊடகவியலின் வீழ்ச்சியின் அடையாளம் சவுக்கு சங்கர் என்கிற இந்த பேர்வழி ஆக, இது இரண்டு தீய சக்திகளுக்கிடையே நடக்கும் சச்சரவு எவர் தலையீடும் இல்லாமலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடும்


Jagan (Proud Sangi)
மே 06, 2024 18:46

எடப்பாடி மற்றும் அதிமுக பின்னல் இருக்கு என்று நினைத்தார் எடப்பாடி கழட்டி விட்டுவிட்டார் எடப்பாடி இந்தமாதிரிதான் என்று தெரிந்தும் முட்டுக்குடுத்தார் இப்ப முட்டு சந்து தான் எடப்பாடியை ஆதரிக்கும் எல்லாருக்கும் இது ஒரு எச்சரிக்கை


Sainathan Veeraraghavan
மே 06, 2024 16:29

தான் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று தவறான பழி வாங்கும் எண்ணத்தோடு பேசிய சவுக்கு சங்கருக்கு சரியான பாடம்


Naga Subramanian
மே 06, 2024 16:15

நம் நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏக வசனத்தில் பேசுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கிறார்களோ?


venugopal s
மே 06, 2024 20:14

தமிழக முதல்வரை கேவலமாக பேசுபவர்களை நேர்மையானவர்களாக நினைக்க முடிந்தால் இதை ஏன் நினைக்க முடியாது?


Bala Paddy
மே 06, 2024 15:41

ஆர்டிகிள் தான் வேற வழி இல்லை இல்லை


பாரதி
மே 06, 2024 11:48

கருத்து சுதந்திரம்ன்னு மீடியாக்கள் குதிப்பதும் அலருவதும் எல்லாம் திருடர்களுக்காக மட்டும்தான்...


Jayaraman Sekar
மே 06, 2024 10:39

ஹா ஹா இவருக்கு வாய் பெருசு


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி