உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடிவெட்டும்போது எம்எல்ஏ மகன் காதை கட் செய்த கடை ஊழியர்: சேலத்தில் சம்பவம்

முடிவெட்டும்போது எம்எல்ஏ மகன் காதை கட் செய்த கடை ஊழியர்: சேலத்தில் சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ மகன் ரவிதாஸ் முடிவெட்டும்போது கடை ஊழியர் காதை வெட்டியதால் பிரச்னையானது. பின்னர் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகினர்.சேலம் மேற்கு சட்டசபை தொகுதி பாமக எம்எல்ஏ.,வாக இருப்பவர் அருள் ராமதாஸ். இவரது மகன் ரவிதாஸ் (வயது 22) கடந்த ஜனவரி 1ம் தேதி காலையில் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் முடி வெட்ட சென்றார். அவருக்கு கடை ஊழியர் ஹர்சன் ராய் என்பவர் முடி வெட்டியுள்ளார். அப்போது கவனக்குறைவாக முடியுடன் சேர்த்து காதில் இரு இடத்தில் கடை ஊழியர் வெட்டியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ரவிதாஸ், கடை ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், எம்எல்ஏ தரப்பு மற்றும் கடை ஊழியர் தரப்பு சமரசம் பேசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். எம்.எல்.ஏ.,வின் மகன் காது வெட்டப்பட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜன 04, 2024 00:12

இதுபோன்று 'தவறுதலாக' பல பேர் காது அறுபட்டிருக்கிறது. அப்ப எல்லாம் செய்தி வரவில்லை. ஒரு MLA மகன் என்கிற காரணத்தினால் செய்தி. ஆமாம் நான் கேட்கிறேன் 'யாரு அந்த MLA -க்கள்?' நாம் போட்ட பிச்சை வாக்குகளால் அந்த பதவி அவர்களுக்கு. இதில் என்ன பெரிய சீன் வேண்டிக்கிடக்கு?


jagan
ஜன 03, 2024 22:52

நம்ம டுமீலுக்கு ஹிந்தி தெரியமா ? சண்டை போட


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:49

காதுல கடுக்கன் போட்டிருந்தாரோ?


jagan
ஜன 04, 2024 03:49

தீமுககாரன் என்றால் கடுக்கன் சந்தேகம் வரும். முடி திருத்தியவர் வட இந்தியர் எனவே ஆக்சிடென்ட் தான்


BALU
ஜன 03, 2024 17:16

ஒரு தடவை கவனக் குறைவாக நட்ந்திருந்தால் மன்னிக்கலாம்.இரு இடங்களில் அதாவது இரண்டு முறை கவனக் குறைவாக காதை வெட்டுபவன் அந்தத் தொழிலே செய்யக் கூடாது.


Mani . V
ஜன 03, 2024 16:10

என்னமோ கழுத்தை வெட்டியது மாதிரி ஸீன் போடுறானுங்க. ஓ, வருங்கால ரௌடியாகப் போகிறவர் என்ற தெனாவட்டா? காதில் ரெண்டு கீறல் போட்டதெல்லாம் ஒரு பிரச்சினையா?


R S BALA
ஜன 03, 2024 14:00

இது போல சலூன் வெட்டு அனுபவம் பலருக்கும் உண்டே.. இரண்டு முறை என் காது வெட்டுபட்டுள்ளது அதில் கொஞ்சம் பவுடர் லோஷன் தடவி அனுப்பிவிடுவார்கள்.????.


aaruthirumalai
ஜன 03, 2024 13:17

குப்பன் சுப்பன்னா செய்தி ஆகுமா?


duruvasar
ஜன 03, 2024 12:55

தாலி அறுப்பு கும்பலில் ஒருவரின் மகனின் காது அறுப்பு ஒரு வித்தியாசமாக இருக்கிறது.


jayvee
ஜன 03, 2024 12:46

தண்டனை.. எவ்வளவு லட்சமோ ?


வாய்மையே வெல்லும்
ஜன 03, 2024 12:27

நம்மூருல தான் எம் எல் ஏ என்றால் என்னமோ ராஜாவிற்கு மேல அதிகாரம் உள்ளது போல ஒரு பிம்பம் ஏற்படுத்தி உள்ளனர்.. வோட்டு பிச்சை எடுத்து அரசுவேலை செய்பவர் மக்களின் சேவகன் என்கிற முறையில் தான் அவர்களை பார்க்கவேணும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை