உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணமக்களுக்கு பட்டு சேலை,வேட்டி சட்டை: பழனிசாமி

மணமக்களுக்கு பட்டு சேலை,வேட்டி சட்டை: பழனிசாமி

கம்பம்: தேனி மாவட்டம், கம் பம் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில், 11,000 ஏரிகள், கண்மாய்களை துார் வாரினோம். அதில் கிடைத்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், 2 4 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். இன்று சுழற்சி முறையில் சப்ளை தருகின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரை நோக்கி, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு நிலவரத்துக்கு இதுவும் சான்று. அ.தி.மு.க., அரசில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் 52 லட்சம் குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அந்த திட்டம் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மணமகனுக்கு பட்டு வேட்டி சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை என்று அறிமுகம் செய்யப்படும். தி.மு.க., ஒரு கம்பெனி. அந்த குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் தான் பொறுப்பிற்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்போது இன்பநிதியும் வந்து விட்டார். கருணாநிதி என்ன ராஜ பரம்பரையா? அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகலாம். இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிணைப்பு கோஷம்!

அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி தேனியில் இருந்து பிரசார வாகனம் மூலம் கம்பம் வந்தார். அவரது வாகனம், அனுமந்தன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, 20 பேர் கும்பல் வழிமறித்தது. பாதுகாப்பிற்காக வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர். அதையடுத்து, பழனிசாமி வந்த வாகனம் தொடர்ந்து சென்றது. அப்போது வழிமறித்த கும்பலில் இருந்தோர், 'ஒன்றிணைப்போம் ஒன்றிணைப்போம்; கட்சியை ஒன்றிணைப்போம்' என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை