உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

சென்னை:எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் பதிவிட்டு இருப்பதாவது: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து என்பது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது.முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்க கூடாது. நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பது தான் இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்கும். நீட்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு நழுவ பார்க்கிறது. என முதல்வர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Rajendra kumar
ஜூன் 15, 2024 15:38

நீட் தேர்வினால், திமுக வினருக்கு மருத்துவ கல்லூரி சீட் மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய்கள் நஷ்டம் என்பது வருந்தத்தக்க விஷயம்தான்


Gokul Krishnan
ஜூன் 15, 2024 13:34

IAS IPS Jeee tered accountant போன்ற தேர்வுகளில் தமிழர்களின் தேர்ச்சி மிக குறைவு அதற்கும் நீட் தான் காரணமா


hariharan
ஜூன் 15, 2024 10:11

லக்க் முதற்கொண்டு பிளஸ் டூ வரைக்கும் படிக்கும் மாணவர் மருத்துவம்,தொழிலநுட்பம் என அனைத்திலும் சேர தகுதியான வகையில் பயிற்றுவிக்க படுகிறார். ஆகவே பிளஸ் டூ வில் பெறும் மதிப்பெண்ணை வைத்து டாக்டர் சீட் கொடுப்பது தான் நேர்மையானதாக இருக்கும். நீட் தேர்வு எழுதாமல் எம் பி பி எஸ் படித்த மருத்துவர்கள் தான் சென்னையை உலகின் சிறந்த மருத்துவ மையங்களில் ஒன்றாக மாற்றினர். இனி 5,10 ரூபாய் வைத்தியர் எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை.. நீட் தேர்விற்கு செலவழிக்கும் பணத்தை அந்த மருத்துவர்கள் மக்களிடம் தான் வசூலிப்பர்..


Bala Paddy
ஜூன் 15, 2024 04:38

அரசின் பங்கு இல்லை அது.


S.V.Srinivasan
ஜூன் 14, 2024 15:07

இங்குள்ள திராவிட மாடல் அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகளின் வருமானம் நின்றுவிட்டது . அதை திருப்பி நடைமுறைக்கு கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார் முக்கிய மந்திரி.


PR Makudeswaran
ஜூன் 14, 2024 11:00

இதெல்லாம் சொல்லி வாதாடவில்லை. தி மு க வினருக்கு பணம் வராது எண்பது நிதர்சன உண்மை. சாராயத்தில் பணம் வருகிறது. நீட்டில் வரவில்லை. ஏமாற்றுவதில் மு க காலத்தில் இருந்து பழகி வந்தது. வழி மாறி போக கசக்கிறது.


Raman V K
ஜூன் 14, 2024 10:03

உள்ளங்கை அரிக்கிறது.


Murugananda Bharathi
ஜூன் 14, 2024 09:55

நீட் தேர்வு எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளன என்பதனை யூட்யூபில் பாருங்கள் புரியும்


Murugananda Bharathi
ஜூன் 14, 2024 09:52

இதனையும் சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும் இனிக்குதா புலிக்குதா? கசக்குதா? எனவே நீட் தேர்வு எழுதிய அவர்களுக்கு தான் தெரியும் எவ்வளவு முறைகேடுகள் என்பதனை


Murugananda Bharathi
ஜூன் 14, 2024 09:51

எதையும் சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும் புளிக்குதா இனிக்குதா கசக்குதா என்பதை உணர முடியும் அதே போன்று நீட் தேர்வு எழுதி அதில் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் NTA எவ்வளவு முறைகேடுகளை தன்னிச்சையாக கையாண்டு உள்ளது என்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தான் தெரியும் நீக்கப்பட்ட பாடத்திலிருந்து வினாக்களை கேட்டுவிட்டு அதற்குப் போன ஸ்மார்ட் வழங்குவதற்கு விதிகள் இருந்தும் அதுக்கு பணம் கட்டியும் அதற்கு போனஸ் மார்க்கு வழங்கவில்லை இது போன்ற நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன நேர்மையான கோச்சிங் சென்டர் நடத்துபவர்களை விசாரித்தால் தெரியும் இதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் அதனை யூட்யூபில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை