மேலும் செய்திகள்
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
6 hour(s) ago | 52
மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
15 hour(s) ago | 4
சென்னை:ஈரோடு, மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில், நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒருசில இடங்களில் இன்று, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் சில இடங்களில், வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தியில், 102; மதுரை விமான நிலையத்தில், 101; நாமக்கல், திருச்சியில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 hour(s) ago | 52
15 hour(s) ago | 4