உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுடன் கொ.ம.தே.க., கூட்டணி பேச்சுவார்த்தை

தி.மு.க.,வுடன் கொ.ம.தே.க., கூட்டணி பேச்சுவார்த்தை

சென்னை : தி.மு.க., குழுவுடனான பேச்சு மிகவும்சுமுகமாக நடந்ததாக, கொங்கு நாடு மக்கள்தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறினார்.தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., குழுவினருடன் நேற்று நடத்திய பேச்சுக்கு பின், அவர் கூறியதாவது:தொகுதி பங்கீடு பேச்சு மிகவும் சுமுகமாக நடந்தது. தி.மு.க.,வுடன் 2017ம் ஆண்டு முதல் கூட்டணி அமைத்து பயணித்து வருகிறோம். அடுத்தகட்ட பேச்சு குறித்த தேதியை, முதல்வரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாக குழுவினர் தெரிவித்தனர். தி.மு.க.,கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Narayanan
பிப் 13, 2024 16:14

இந்த மாதிரி சின்ன கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ