உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 24 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 24 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜூன் 24ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என்றும், அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் கூட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.,12ல் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற்றது. பிப்.,21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து மார்ச்சில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில், ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
ஜூன் 07, 2024 17:17

வாழ்த்துக்கள் , மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள சட்டங்களில் மக்களுக்கு பயன்கள் அவ்வளவு எளிதாக இல்லை, மாறாக தலை நிமிர்ந்து உண்மையைக் கேட்டால் சட்டத்துக்கு இடையூறு செய்வதாக சட்டத்தின் மறுபக்கம் நேர்மையானவர்களை தாக்கும் வண்ணம் உள்ளது . ஆனால் மக்களுக்காக வகுக்கப்பட்ட சட்டம் அரசு ஊழியர்களுக்கு நேர்மையானவர்கள் மூலம் அரசுக்கு வருமானமும் , ஒரு சிலரால் அவர்களுக்கு தனி வருமானமும் செல்கிறது , தலைக்கவசம், கார் சீட் பெல்ட் , அதிவேகம், நோ பார்க்கிங் போன்ற நிலைகளில் . இதே சாராயக்கடைகளில் மாமூல் அதிக இலைக்கு விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறியாது , எல்லா துறைகளிலும் எப்போதும்போல் எல்லா நிலைகளிலும் வேலைக்கு ஏற்ப கொடுக்கப்படும் தனித்தொகை செயல்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . செல்வாக்குள்ளவர்கள் புகார் கொடுத்தால் பயனடைகிறார்கள் . இதையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக பேசினால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்


Balasubramanian
ஜூன் 07, 2024 14:39

வரும் பௌர்ணமிக்குள் நடந்து விடுமா?


டேனியல்,இரட்சண்யபுரம்
ஜூன் 07, 2024 14:21

அடுத்த இரண்டு வருடமும் இந்த அப்பாவுவே சபாநாயகர் பதவியில் நீடிக்க வேண்டும் அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்


Kumar
ஜூன் 07, 2024 13:22

கூட்டத்துல துதிபாடுகளும், அர்ச்சனைகளும் தான் இடம் பெறும். மக்களுக்கு பயனுள்ள கூட்டமாக அமைந்தால் நல்லது.


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 12:49

துவக்க நிகழ்ச்சியாக ஜெபம், திருப்பலி உண்டா? அன்றன்றைக்குள்ள அப்பம்? என்னயிருந்தாலும் ஜார்ஜ் பொன்னையா உண்மையைத்தானே கூறினார்?


Anand
ஜூன் 07, 2024 12:42

இவிங்களுக்கு ஓத்தூத புதியதாக இன்னொரு கிரிப்டோ ஆள் அரிதாரம் பூசி கிளம்பியுள்ளான்.


Anand
ஜூன் 07, 2024 12:34

தீயசக்தியின் புகழ்பாடும் தொடர்......ஆமின்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை