உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கிறிஸ்தவர், இஸ்லாமியருக்கு சி.ஏ.ஏ., சட்டத்தால் பாதிப்பு இல்லை அர்ஜூன் சம்பத் பேட்டி

தமிழக கிறிஸ்தவர், இஸ்லாமியருக்கு சி.ஏ.ஏ., சட்டத்தால் பாதிப்பு இல்லை அர்ஜூன் சம்பத் பேட்டி

விருதுநகர்:தமிழகத்தில் வசிக்கும் எந்த ஒரு கிறிஸ்தவர், இஸ்லாமியருக்கும் சி.ஏ.ஏ., சட்டத்தால் பாதிப்பு இல்லை. திராவிட கட்சிகள் வேண்டும் என்றே பொய்ப் பிரசாரம் செய்கின்றன என ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். விருதுநகரில் அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் சி.ஏ.ஏ., சட்டத்தால் பயனடைவார்கள். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுத்தால் தமிழர்களே இல்லாமல் இலங்கை பவுத்த நாடாக மாறிவிடும்.ராணுவம், பாஸ்போர்ட், குடியுரிமை ஆகியவை மத்திய அரசால் மட்டுமே வழங்க முடியும் என்பதை கூட தெரியாமல் சி.ஏ.ஏ., சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர்கள் ஸ்டாலின், பினராயிவிஜயன், மம்தா ஆகியோர் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், சி.ஏ.ஏ., சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அரசியலில் அடிப்படை அறிவு கூட இல்லாதவர் நடிகர் விஜய் என்பது தெளிவாக தெரிகிறது.தமிழகத்தில் வசிக்கும் எந்த ஒரு கிறிஸ்தவர், இஸ்லாமியருக்கும் சி.ஏ.ஏ., சட்டத்தால் பாதிப்பு இல்லை. திராவிட கட்சிகள் வேண்டும் என்றே பொய்ப் பிரசாரம் செய்கின்றன. தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தாமல் வெறும் விளம்பரங்களை வைத்து தமிழக அரசு ஆட்சியை நடத்துகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்தும் முருக மாநாட்டில் முருகனை தவறாக பேசி வரும் திராவிடர் கழகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்