மேலும் செய்திகள்
நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்
6 hour(s) ago | 24
சென்னை:தைப்பூசம் மற்றும் குடியரசு தினம் விடுமுறையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தைப்பூசம் விழா மற்றும் குடியரசு தினம், சனி, ஞாயிறு தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவர். எனவே, பயணியரின் வசதிக்காக, இன்று முதல் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு இன்றும், நாளையும் தினமும் இயக்கப்படும் பஸ்களோடு, கூடுதலாக, 405 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 175 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திரும்புவோருக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இன்று பயணிக்க 5,722 பேரும், நாளைக்கு பயணிக்க 7,222 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, வரும் 28ம் தேதி பயணிக்க 15,669 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பவுர்ணமியையொட்டி, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 25ம் தேதி, 10 ஏசி பஸ்கள் இயக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
6 hour(s) ago | 24