உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய புத்தாக்க விருது போட்டிக்கு தமிழகத்தில் 20 மாணவர்கள் தேர்வு

தேசிய புத்தாக்க விருது போட்டிக்கு தமிழகத்தில் 20 மாணவர்கள் தேர்வு

விருதுநகர் : டில்லியில் நடக்க உள்ள தேசிய புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 20 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். டில்லியில் ஆகஸ்ட 14 முதல் 16 வரை புத்தாக்க அறிவியல் விருதுக்கான தேசிய போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்ற 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழகத்தை சேர்ந்த 20 மாணவர்களை , தமிழ் நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

அவர்கள் விபரம்: ஏ.சந்துரு(கன்னியாகுமரி குமாரபுரம் அரசுப்பள்ளி) எஸ். அஜித்குமார்(கரூர் மனவாடி ஊராட்சி ஒன்றிய பள்ளி) எ.அபுபக்கர் சித்திக்(மதுரை அய்யூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி) வி.தேவகுமாரி(நாகை மாவட்டம் அக்கரை சீதாலட்சுமி நடுநிலைப்பள்ளி ) ஜே.ரூபமதி(வெளிப்பாளையம் நடராஜன்- தமயந்தி மேல் நிலைப்பள்ளி) ஜே.தேவராஜ் (காஞ்சிபுரம் மதுரமங்கலம் அரசுப்பள்ளி) ஜி.பவித்ரா (அச்சிரப்பாக்கம்அரசுப்பள்ளி) எஸ்.கலாநிதி(நாமக்கல் பழையபாளையம்அரசுப்பள்ளி) ஆர்.முருகேஷ்(கிருஷ்ணகிரி ஏலகிரி அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி) எ.கார்த்திகேயன்(ராமநாதபுரம், டி.எம்.கோட்டை அரசுப்பள்ளி) டி.பவித்ரா(திருவாரூர் கூத்தாநல்லூர்அரசுபள்ளி) ஆர்.ராஜேஸ்(அரியலூர் பொன்பரப்பிஅரசு பள்ளி) வி.ராமச்சந்திரன், (வேலூர் அரக்கோணம் ஆதிதிராவிடர் பள்ளி) ஜே.சிவசங்கரி(ஆற்காடு சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி) டி.சுமித்ரா( குனிச்சியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி )ஆர்.சி.ரவீந்தர்(சேலம் மல்லிகுந்தம் அரசு மேல் நிலைப்பள்ளி ) வி.வாசந்தோஷ்(வளசரவாக்கம் தேவி அகாடமி பள்ளி)எம்.விவேக்சங்கர்(தூத்துக்குடி கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளி ) பி.விக்ரம் (வத்தலக்குண்டு அரசுப்பள்ளி) கணேஷ் காமாட்சிநாதன் (விருதுநகர் ராஜபாளையம் எஸ்.ஐ.ஆர். ரோட்டரி வித்தியாலயா மெட்ரிக் பள்ளி) .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ