வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்போ, முன்பு அந்தக்குழந்தை தவறி விழுந்திருக்காது கணவன் மீதிருந்த கோபத்தால் ஆமாம், அதேதான்
மேட்டுப்பாளையம் : சென்னை பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்த குழந்தையின் தாய், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.சென்னையை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அண்மையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மாடியில் உள்ள பால்கனி தகர வீட்டில் வெங்கடேஷ் ரம்யா தம்பதியினரின் 7 மாத குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தினர் ஒன்றாக இணைந்து மீட்டனர். குழந்தையை மீட்கும் காட்சி சமூக வகைதளத்தில் வெளியாகி வைரலானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nfepjt0y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர்கள். குழந்தையின் தாய் ரம்யா, 33, கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். குழந்தை பால்கனியில் விழுந்த சம்பவத்திற்கு பிறகு, வெங்கடேஷ் -ரம்யா தம்பதியினர், சென்னையில் இருந்து கிளம்பி காரமடைக்கு வந்துவிட்டனர். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரமடை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போ, முன்பு அந்தக்குழந்தை தவறி விழுந்திருக்காது கணவன் மீதிருந்த கோபத்தால் ஆமாம், அதேதான்