உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாவின் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படிக்காததே பிரச்னை: அண்ணாமலை

அப்பாவின் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படிக்காததே பிரச்னை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ''விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், கள்ளுக்கடையை தி.மு.க., அரசு திறக்கட்டும்,'' என, கோவையில் அண்ணாமலை சவால் விடுத்தார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு, அவர் அளித்த பேட்டி:

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் இதை எதிர்த்து, தமிழக சட்டசபையில், தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். 1967ம் ஆண்டு வரை, இந்தியாவில் ஒரே சமயத்தில் சட்டசபை, லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தது.அதன்பின் காங்., கட்சி, சட்டப்பிரிவு 356ஐ, 50 முறை பயன்படுத்தி மாநில ஆட்சியை கலைத்ததால், தேர்தல் முறை மாறி வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன், 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்திலும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் தேவை' என, 1970ல் வலியுறுத்தியுள்ளார்.அப்பா கருணாநிதி எழுதிய புத்தகத்தை மகன் ஸ்டாலின் படிக்காததே இந்த பிரச்னைக்குக் காரணம். மொத்தத்தில் அப்பாவின் கருத்துக்கு எதிராக மகன் ஸ்டாலின் உள்ளார் என்பதே, இதன் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டியது.வரும் லோக்சபா தேர்தலில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' வர நடைமுறை சாத்தியமில்லை. இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின், 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என 10 வரிகளில் எழுதிக் கொண்டு வந்து பேசி, முன்யோசனை இல்லாமல் செயல்பட்டுள்ளார். யாரை குழப்ப, தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளார் என தெரியவில்லை.

தி.மு.க., வாக்குறுதி என்னாச்சு

விவசாயிகள், ஆதார விலை கோரி டில்லியை நோக்கி செல்கின்றனர். இரண்டு பொருளுக்கு இருந்த ஆதார விலை, 22 பொருட்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக கொண்டு வந்தால் இந்திய பட்ஜெட்டான 45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தேவைப்படும்.கரும்புக்கும், நெல்லுக்கும் ஆதார விலை நிர்ணயிப்பதாக கூறிய தி.மு.க., தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; அதை எதிர்த்து யாரும் போராடவில்லை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், கள்ளுக் கடைகளை திறக்கட்டும். கோவையில் பிப்., 14ல் நடந்த குண்டுவெடிப்பை யாரும் மறக்க முடியாது. இந்த வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேரை விடுதலை செய்ய, தற்போது தி.மு.க., முயன்று வருகிறது.கோவை குண்டு வெடிப்பில், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை வெளியே விடக்கூடாது. அபாயத்திலிருந்து இன்னும் கோவை தப்பவில்லை.சட்டசபை நடவடிக்கைகள், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. கவர்னர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டது, எப்படி உரிமை மீறல் பிரச்னையாகும்?தமிழக சபாநாயகர், தி.மு.க., அடிப்படை உறுப்பினரை விட மோசமாக நடந்து கொள்கிறார்.மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் பெருமளவில், பா.ஜ.,வில் இணைய காத்திருக்கின்றனர். போன் செய்து யாரையும் அழைக்கவில்லை. முதல் பட்டியலில் இணைந்தோரை விட, இரண்டாவது பட்டியல் அதிகமாக இருக்கும்.என்னை திட்டி, திட்டி பேசும் அ.தி.மு.க.,வினருக்கு வயது என்ன? பா.ஜ.,வின் இணைந்துள்ளோருக்கு, அவர்களது கட்சி பொதுச்செயலரின் வயதை விட குறைவு தான்.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ, கட்சியில் தனிப்பிரிவை ஏற்படுத்த உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாற்றுத ்திறனாளிகளை முதல் குடிமக்களாக அறிவிப்போம்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

'அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது'

அண்ணாமலை கூறுகையில், ''தற்போதுள்ள நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்களால், எம்.பி.,க்களால் சேவை செய்ய இயலவில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அதிகாரிகள் தேர்தல் நடத்துகின்றனர். ''எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு, சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது அவசியம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி