உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் அமல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முதல்வர் துவக்கி வைத்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.'பொதுமக்கள் முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, கடந்த நவ., 23ம் தேதி முதல்வர் அறிவித்தார். இத்திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், குறிப்பிட்ட தாலுகாவில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், கலெக்டர் தலைமையில் நடக்கும்.முகாம் நடக்கும் தாலுகா குறித்த தகவல், முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். முகாம் நடக்கும் அன்று காலை 9:00 மணி முதல், மறுநாள் காலை 9:00 மணி வரை, மாவட்டகலெக்டர் மற்றும் இதர உயர் அலுவலர்கள், அந்த தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசு துறைகளின் வழியே செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
பிப் 01, 2024 01:08

தயவு செய்து எங்கள் ஊருக்கு வந்துவிடாதே என்று பல ஊர் மக்கள் கேட்டுக்கொள்கிறார்களாம்.


duruvasar
ஜன 31, 2024 13:45

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஸ்பெயின் ஊருக்கு போயிருக்கிறார்.


ஆரூர் ரங்
ஜன 31, 2024 12:40

டாஸ்மாக் இல்லாத ஊர்கள் விண்ணப்பிக்கலாம். உடனே நடவடிக்கையெடுக்கப்படும்????. மற்ற விண்ணப்பங்கள் வீராணம் குழாய்களுக்குள் அல்லது கூவத்தில் போடப்படும்.


sridhar
ஜன 31, 2024 10:56

உங்களை தேடி உங்கள் ஊரில் ஊழல் , உங்கள் அனுமதியோடு . எங்களுக்கே வோட்டு போடுங்க.


V GOPALAN
ஜன 31, 2024 10:28

Because of election three times free biriyani in Hot packs will come to our Door step till May first week from today. Money will come only in April.


அப்புசாமி
ஜன 31, 2024 10:17

உங்க ஊருக்கே வந்து ஆட்டை. எல்லோரும் இடிப் போயி இவிங்க போனப்புறம் வாங்க.


Karthikeyan K Y
ஜன 31, 2024 09:52

வெள்ள நிவாரண தொகை படிவங்கள் வாங்கி இன்று வரை கொடுக்க பட வில்லை. கேள்வி யாரிடம் கேட்பது என்னும் பொறுப்பானவர்கள் யாரும் இல்லை நான் முதல்வன், மக்களின் முதல்வர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று திட்டங்கள் எட்டு சுரைக்கையாக இருக்கிறது கவுன்சிலர் எம் எல் ஏ எம் பி யாரவது போன் போட்டால் பேசி இருக்கிறார்களா மேயர் ஒரு விழாவிலே போன் பேசி கொண்டு பரிசை கொடுக்கிறார்


குமரி குருவி
ஜன 31, 2024 07:47

தேர்தல் பிரசார வேளையில் தி.மு.க. வாங்கிய புகார் பெட்டி புகார்களுக்கு இன்னும் பதில் இல்லை ....புது மாதிரி விடியல் அரசு விளையாடுது..


ராஜா
ஜன 31, 2024 07:26

ஏற்கனவே இருந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு புதிய லேபிள் போல் தெரிகிறது.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜன 31, 2024 07:25

இவ்வளவு நாளா உங்கள் எல்லோரையும் மொத்தமா ஏமாத்திக்கிட்டு இருந்தோம் அந்த திட்டம் எங்களுக்கு சரியா பலனளிக்கவில்லை அதனால இனிமே உங்களை தேடி உங்கள் ஊருக்கே வந்து உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனித் தனியா ஏமாற்ற போகிறோம்.ஏமாற்றுவதற்கு நாங்க ரெடி ஏமாறுவதற்கு நீங்க ரெடியா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை