உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழல்

 தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழல்

தமிழகத்தில் மது, கஞ்சா, போதை கலாசாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, தொடர்ந்து நடக்கின்றன. லஞ்சம், ஊழல் காரணமாக எந்த வகையிலும், தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழல் நிலவுகிறது. அனைத்து உரிமைகளையும் இழந்து மக்கள் வாடுகின்றனர். தமிழக அரசின் திட்டங்கள் எல்லாம் சொல்லளவிலும், ஏட்டளவிலும் வெறும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல், மக்கள் நலனை பற்றி அரசு கவலைப்படாமல் இருக்கும் நிலை தொடர்கிறது. வரும் ஜனவரி 9ம் தேதி கடலுார் மாவட்டம் பாசார் கிராமத்தில், தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடக்கிறது. நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் அந்த மாநாடு நடக்கும். - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை