உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூரண மதுவிலக்கு வாய்ப்பு இல்லையாம்: அமைச்சர் சொல்கிறார்

பூரண மதுவிலக்கு வாய்ப்பு இல்லையாம்: அமைச்சர் சொல்கிறார்

சென்னை: ‛‛ தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை'', என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.சட்டசபையில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றவாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lzpr744z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மசோதா மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனே கொண்டு வர முடியுமா என சிந்தித்து பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதில் எங்களுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு மதுக்கடையை மூடினால், மற்ற கடையில் மது வாங்கி அருந்துகிறார்கள். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sethu
ஜூலை 01, 2024 16:32

3 படி அரிசி லட்சியம் 1 படிஅரிசி நிச்சயம் திருட்டு திமுக .


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:40

கொரோனா காலகட்டத்தில், அதிமுக ஆட்சிக்காலத்தில் உங்க தலைமைக்குடும்பம் போராடினதெல்லாம் பொய்யா கோப்ப்பால்????


Thanga Durai
ஜூன் 29, 2024 20:27

இந்த மாதிரி பொறுப்பு, திறமை இல்லாத அரசியல் வியாதிகள் கைகளில் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருகிறது..


என்றும் இந்தியன்
ஜூன் 29, 2024 18:32

நான் என் வீட்டில் நாய் வளர்க்கின்றேன், நான் அனுமதித்தால் அது குறைக்கும் இல்லை கடிக்கும். இதற்கும் கோரநிதி குடும்பத்தின் கீழ் வேலை செய்யும் திருட்டு திராவிட மடியல் அரசு அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம். ஒன்றுமேயில்லை என்பது போல அவர்கள் ஒவ்வொரு உளறலும் இருக்கின்றது


subramanian
ஜூன் 30, 2024 14:37

என்றும் இந்தியன், நாய் என்று மனித குலம் கூறும் அது நன்றி உள்ள பிராணி. நம் நண்பன். நம்மை நம்ப வைத்து கழுத்து அறுத்து இன்பம் அடையாது. ஆனால் நீங்கள் சொல்லும் அவர்கள் நம்மை பச்சையாகவே ரத்தம் குடிக்கும் அரக்கர்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 29, 2024 18:25

எங்களுக்கு டாஸ்மாக்கினாட்டு மக்களால் இந்த வருடம் ரூ 52,000 கோடி இதே போல ஒவ்வொரு வருடமும் கிடைப்பதால் பூரண மது விலக்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் சொன்னதாக எடுத்துக்கொண்டால் சரியான அர்த்தம் கிடைக்கும்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 17:26

2016 சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தான் வென்ற உடனே மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார். எல்லாவற்றுக்கும் பெயர் வைக்கும் அரசு அவருடைய வாக்குறுதியை மட்டும் குப்பையில் போட்டுவிட்டது.


Anand
ஜூன் 29, 2024 17:25

சாராயம் இல்லையென்றால் அரசியல், தேர்தல், வாக்கு என ஒன்றே இருக்காது, அவ்வளவு ஏன் போராளீஸ் இனமே அழிந்துவிடும்.


GNANAM
ஜூன் 29, 2024 16:49

அண்டை மாநிலங்களில் வந்தால் ஒழிய இங்கு சாத்தியம் இல்லை சொல்பவர்கள் முதலில் அவர்கள் வீட்டில் குடிப்பவர்கள் இருந்தால் அவர்களை சரிசெய்து பின்னர் அரசை குறை கூறுங்கள்


subramanian
ஜூன் 30, 2024 14:31

ஞானம் சார், அண்டை மாநிலங்களில் முழுவதும் இலவச நவோதயா பள்ளிகள் இருக்கிறது. தமிழ் நாட்டில் இல்லை.


NAGARAJAN
ஜூன் 29, 2024 15:52

இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு. . இப்போது ஒரு பேச்சு. . இவர்களின் லட்சனம் தெரியாதா


R.P.Anand
ஜூன் 29, 2024 15:48

அரசிற்கு வருமானம் வேண்டும் என்றால். அரசே பெட்ரோல் பங்க் நடத்தலாம். அரசே டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தலாம். தண்ணீர் பாட்டில் விற்கலாம். அரசு மலிவு விலை மெடிகல் நடத்தலாம்.ஆனால் தமிழனை குடிக்கத்தான் வைப்பேன் என்று திராவிடம் திரிகிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை